Published : 22 Sep 2025 06:08 AM
Last Updated : 22 Sep 2025 06:08 AM

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு: 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு சுதந்​திரா நகரை சேர்ந்​தவர் மீனாட்​சி(42). கணவர் மற்​றும் 2 மகள்​களு​டன் வசித்து வரு​கிறார். மீனாட்சி வீட்டு வேலை செய்து குடும்​பத்தை கவனித்து வரு​கிறார். இந்​நிலை​யில், கடந்த 19-ம் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு மீனாட்சி வெளியே சென்​றார்.

பின்​னர், திரும்பி வந்து பார்த்தபோது, வீட்​டில் பீரோ திறந்து கிடந்​ததையும், அதில் இருந்த இரண்டரை பவுன் நகைகள், ரூ.35,000 பணம் திருடு போயிருந்​ததை கண்டு அதிர்ச்சி அடைந்​தார். இதுகுறித்து, ஆயிரம் விளக்கு காவல் நிலை​யத்​தில் அவர் புகார் அளித்​தார்.

போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், வீட்​டின் ஜன்​னல் கம்​பியை வளைத்​து, அதன் வழி​யாக மர்ம நபர்​கள் வீட்​டுக்​குள் புகுந்து திருடி சென்​றிப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்​து, அப்​பகு​தி​யில் பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி கேம​ரா​வில் பதி​வான காட்​சிகளை வைத்​து, திருட்​டில் ஈடு​பட்ட அதேபகு​தியை சேர்ந்த ஜீவா(20) மற்​றும் 2 சிறு​வர்​களை போலீ​ஸார் கைது செய்தனர்.

மேலும், அவர்​களிடம் இருந்து நகை, பணத்தை போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர். இதேபோல், தரமணி​யில் வீட்​டின் பூட்டை உடைத்​து, வீட்​டில் இருந்த டிவியை திருடி சென்ற பவித்​ரன்​(23), கோகுல்​(23) ஆகிய இரு​வரை போலீ​ஸார்​ கைது செய்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x