Published : 22 Sep 2025 06:55 AM
Last Updated : 22 Sep 2025 06:55 AM

திருநெல்வேலி | விடுதி மாணவிக்கு பாலியல் தொல்லை: காப்பாளர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்​வேலி மேலப்​பாளை​யத்​தில் முஸ்​லிம் மாணவி​களுக்​கான தங்​கும் விடுதி உள்​ளது. இங்கு ஏராள​மான மாணவி​கள் தங்​கி, மதரஸா​வில் கல்வி பயின்று வரு​கின்​றனர். இந்​நிலை​யில், 14 வயது மாணவி ஒரு​வருக்கு விடுதி காப்​பாளர் அபூபக்​கர் (46) என்​பவர் பாலியல் தொல்லை கொடுத்​த​தாக கூறப்​படு​கிறது.

இதுகுறித்து அந்த மாண​வி, விடு​தி​யின் மற்​றொரு காப்​பாள​ரான வகிதா (43) என்​பவரிடம் தெரி​வித்​துள்​ளார். ஆனால், இதுபற்றி வெளியே யாரிட​மும் சொல்ல வேண்​டாம் என்று அவர் கூறி​யுள்​ளார்.

இதுகுறித்து மாண​வியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விடு​தி காப்​பாளர்கள் அபூபக்​கர், வகிதா ஆகியோரை போலீஸார் கைது செய்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x