Published : 20 Sep 2025 06:07 AM
Last Updated : 20 Sep 2025 06:07 AM

சென்னை | போதைப்பொருள் விற்ற பொறியியல் பட்டதாரிகள் 4 பேர் கைது: வேலை கிடைக்காததால் கடத்தலில் ஈடுபட்டனர்

சென்னை: மெத்​தம்​பெட்​டமைன் போதைப் பொருள் கடத்​தலில் ஈடு​பட்​ட​தாக பொறி​யியல் பட்​ட​தா​ரி​கள் 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சென்​னை​யில் பொறி​யி​யில் படித்து முடித்த மாணவர்​கள் சிலர் மெத்​தம்​பெட்​டமைன் விற்​பனை செய்து வரு​வ​தாக தனிப்​படை போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது.

அதன் அடிப்​படை​யில் சூளைமேடு போலீ​ஸார் கண்​காணிப்பை தீவிரப்​படுத்​தினர். குறிப்​பாக சூளைமேடு, வீர​பாண்டி நகர் முதல் தெரு சந்​திப்பு அருகே நேற்று முன்​தினம் கண்​காணித்​தனர்.

அப்​போது, அங்கு சந்​தேகப்​படும்​படி நின்​றிருந்த 2 நபர்​களை பிடித்து விசா​ரணை செய்​து, அவர்​களை சோதனை செய்​த​போது, மெத்​தம்​பெட்​டமைன் என்ற போதைப்​பொருள் மறைத்து வைத்​திருந்​தது தெரிய​வந்​தது. அதை பறி​முதல் செய்த போலீ​ஸார், போதைப்​பொருள் வைத்​திருந்த சூளைமேட்​டைச் சேர்ந்த ஜோ பாப்​பிஸ்ட் (20), அதே பகுதி மோவின் லாரன்ஸ் (21) ஆகிய இரு​வரை கைது செய்​தனர்.

அவர்​கள் கொடுத்த தகவலின்​பேரில் அவர்​களது நண்​பர்​களான ஈரோடு மாவட்​டம் காசாபேட்​டையைச் சேர்ந்த டென்​னிஸ் டிசோசா (20), அதே மாவட்​டததைச் சேர்ந்த ரெனித் (22) ஆகிய மேலும் இரு​வரை கைது செய்​தனர். அவர்​களிட​மிருந்து 12 கிராம் மெத்​தம்​பெட்​டமைன், 150 கிராம் கஞ்​சா, 3 ஐ-போன்​கள், மற்​றும் 1 இருசக்கர வாக​னம் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

விசா​ரணை​யில் கைது செய்​யப்​பட்ட 4 பேரும் பொறி​யியல் படித்து முடித்​துள்​ளதும், சரி​யான வேலை கிடைக்​காத​தால் குறுக்கு வழி​யில் பணம் சம்​பா​திக்​கும் நோக்​கில் போதைப் பொருள் கடத்​தல் செயலில் ஈடு​பட்​டது தெரிய​வந்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். தொடர்ந்​து விசா​ரணை நடை​பெற்​று வரு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x