Published : 19 Sep 2025 06:20 AM
Last Updated : 19 Sep 2025 06:20 AM

பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: வேளாண் துறை ஊழியர் கைது

சென்னை: திரு​வள்​ளூரைச் சேர்ந்த மாணவி ஒரு​வர் கல்​லூரிக்கு அரசுப் பேருந்​தில் தின​மும் சென்று வரு​வது வழக்​கம். அதன்​படி வழக்​கம்​போல் கடந்த புதன்​கிழமை திரு​வள்​ளூரிலிருந்து கோயம்​பேடுக்கு பேருந்​தில் பயணித்​தார். அப்​போது பேருந்​திலிருந்த இளைஞர் ஒரு​வர், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்​த​தாக கூறப்​படு​கிறது.

அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பிற பயணி​கள் உதவி​யுடன் அந்த இளைஞரைப் பிடித்து விரு​கம்​பாக்​கம் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​தார். போலீ​ஸாரின் விசா​ரணை​யில் பிடிபட்​டது திருச்​சி​யைச் சேர்ந்த ராகேஷ் (26) என்​பதும், சென்​னை​யில் வேளாண்​மைத் துறை​யில் ஊழிய​ராகப் பணி​யாற்றி வரு​வதும் தெரிய​வந்​தது. இதையடுத்து அவரை பெண் வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் போலீ​ஸார்​ கைது செய்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x