Published : 19 Sep 2025 07:04 AM
Last Updated : 19 Sep 2025 07:04 AM

மூணாறில் ரிசார்ட்ஸ் சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு - நடந்தது என்ன?

ரிசார்ட்ஸ் சரிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த இடத்தை ஆய்வு செய்த வருவாய்த் துறையினர். (உள்படம்) பென்னி, ராஜீவ்

மூணாறு: மூணாறில் தடை செய்​யப்​பட்ட இடத்​தில் கட்​டப்​பட்டு வந்த ரிசார்ட்ஸ் சரிந்து விழுந்​த​தில் 2 பேர் மண்​ணில் புதைந்து உயி​ரிழந்​தனர். இதையடுத்​து, கட்​டிட உரிமை​யாளர்​களான எர்​ணாகுளத்​தைச் சேர்ந்த தம்​பதி கைது செய்​யப்​பட்​டனர்.

மூணாறு பள்​ளி​வாசல் ஊராட்​சிக்கு உட்​பட்ட சித்​தி​ராபுரத்​துக்கு அரு​கே​யுள்ள தட்​டாத்​தி​முக்​கு​வில் தனி​யார் சார்​பில் ரிசார்ட் கட்டு​மான பணி நடந்து வரு​கிறது. தற்​போது இப்​பகு​தி​யில் பரவலாக மழை பெய்து வரு​கிறது.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் ரிசார்ட்​டின் சுற்​றுச்​சுவர் திடீரென இடிந்து சரிந்​தது. மேலும், கட்​டிடத்​தின் ஒரு பகு​தி​யும் சரிந்து விழுந்​தது. இதில் உள்ளே பணி​யாற்​றிக் கொண்​டிருந்த 2 தொழிலா​ளர்​கள் மண்​ணில் புதைந்​தனர்.

தகவலறிந்து வந்த அடி​மாலி, மூணாறு தீயணைப்​புத் துறை​யினர், மண்​ணில் புதைந்த இரு​வரது உடல்​களை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக அடி​மாலி தாலுகா அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர்.

விசா​ரணை​யில், உயி​ரிழந்​தது சங்​குபடியைச் சேர்ந்த ராஜீவ் (40), பைசன்​வாலியைச் சேர்ந்த பென்னி (49) என்​பது தெரிய​வந்​தது. மூணாறு சிறப்பு வட்​டாட்​சி​யர் காயத்​ரி, பள்​ளி​வாசல் ஊராட்​சித் தலை​வர் பிரதீஷ்கு​மார் தலை​மையி​லான குழு​வினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்​தனர்.

பின்பு சிறப்பு வட்​டாட்​சி​யர் காயத்ரி கூறும்​போது, “பாது​காப்​பற்ற இடத்​தில் கட்​டப்​பட்​ட​தால் பணி​களை நிறுத்​து​மாறு ஏற்​கெனவே நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டுள்​ளது. அதை​யும் மீறி கட்​டிய​தால் இந்த விபத்து ஏற்​பட்​டுள்​ளது. மூணாறைச் சுற்​றி​லும் நடை​பெறும் மற்ற கட்​டு​மானப் பணி​களும் அடுத்​தடுத்து ஆய்வு செய்​யப்​படும்” என்​றார்.

இது தொடர்​பாக வெள்​ளத்​தூவல் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​து, கட்​டிட உரிமை​யாளர்​களான எர்​ணாகுளத்​தைச் சேர்ந்த தம்​பதி ஷெபின், ஷெரின் அனிலா ஆகியோரைக் கைது செய்​தனர். மூணாறை சுற்​றி​லும் அனு​மதி பெறாத கட்​டு​மானங்​கள் அதி​கள​வில் நடை​பெற்று வரு​கின்​றன.

சுற்​றுலாப் பயணி​கள் இயற்கை காட்​சியை பார்த்து ரசிக்​கும் வகை​யில் தங்​குமிடம் இருக்க வேண்​டும் என்​ப​தைக் கருத்​தில் கொள்​ளும் இவர்​கள், அவர்​களது பாது​காப்பை கண்​டு​கொள்​வ​தில்​லை. இதனால் பள்​ளத்​தாக்​கு, மண்​சரிவு அபா​யம் உள்​ளிட்ட பகு​தி​கள் இது​போன்ற கட்​டிடங்​கள் கட்​டப்​பட்டு வரு​வ​தாக பொது​மக்​கள் புகார் தெரி​வித்​துள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x