Published : 19 Sep 2025 06:27 AM
Last Updated : 19 Sep 2025 06:27 AM

திருச்சி | மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது

திருச்சி: ​திருச்சி கே.கே.நகர் அமலாபுரம் காலனியை சேர்ந்​தவர் தமிழ்​(52). மணி​கண்​டம் பகு​தி​யில் உள்ள இந்​திரா கணேசன் கல்​லூரி​யில் பேராசிரிய​ராகப் பணிபுரிந்து வந்​தார்.

இந்​நிலை​யில், கடந்த 13-ம் தேதி கல்​லூரி ஆய்​வுக் கூடத்​தில் இருந்த முதலா​மாண்டு மாணவி ஒரு​வரை, பேராசிரியர் தமிழ் தனது அறைக்கு அழைத்து பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்​டுள்​ளார்.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த அந்த மாண​வி, அறை​யில் இருந்து அலறியபடி வெளியே வந்​து, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சக மாணவி​களிடம் கூறி​யுள்​ளார்.

பின்​னர், இது தொடர்​பாக மாண​வி​யின் பெற்​றோர், மணி​கண்​டம் போலீ​ஸில் புகார் அளித்​தனர். மாணவிக்கு 17 வயதே ஆவதால், இந்த வழக்கு திரு​வெறும்​பூர் மகளிர் காவல் நிலை​யத்​துக்கு மாற்​றப்​பட்​டது. பின்​னர், மகளிர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, பேராசிரியர் தமிழை நேற்று கைது செய்​தனர். பின்​னர் அவர் திருச்சி சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x