Published : 18 Sep 2025 05:53 AM
Last Updated : 18 Sep 2025 05:53 AM

சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப்​பொருள் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலை​யத்​தில் ரூ.18 கோடி மதிப்​புள்ள போதைப்​பொருள் பறி​முதல் செய்​யப்​பட்​டது. எத்​தி​யோப்​பியா நாட்​டிலிருந்து கடத்தி வந்​தவர், வாங்கி செல்ல காத்​திருந்​தவர் கைது செய்​யப்​பட்​டனர். வெளி​நாடு​களி​லிருந்து விமானம் மூலம் சென்​னைக்கு போதைப்​பொருள் கடத்தி வரப்​படு​வது தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது.

சுங்​கத் துறை, மத்​திய போதைப்​பொருள் தடுப்​புப் பிரிவு அதி​காரி​கள் போதைப்​பொருள் கடத்தி வருபவர்​களைக் கண்​டு​பிடித்து கைது செய்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், வெளி​நாட்​டிலிருந்து போதைப்​பொருள் கடத்தி வரப்​பட​வுள்​ள​தாக மத்​திய வரு​வாய் புல​னாய்​வுப் பிரிவு அதி​காரி​களுக்கு நேற்று முன்​தினம் ரகசி​யத் தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, சென்னை விமான நிலை​யத்​தில் அதி​காரி​கள் குழு​வினர் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது எத்​தி​யோப்​பியா தலைநகர் அடிஸ் அபா​பா​வில் இருந்து எத்​தி​யோப்​பியன் ஏர்​லைன்ஸ் விமானம் வந்​தது. அந்த விமானத்​தில் வந்த பயணி​களை​யும், அவர்​களின் உடைமை​களை​யும் அதி​காரி​கள் சோதனை செய்து அனுப்​பிக் கொண்​டிருந்​தனர்.

ஒரு பயணி​யின் உடைமை​களை சோதனை செய்​த​போது, அதில் ரூ.18 கோடி மதிப்​புள்ள 1.80 கிலோ எடை​யுள்ள மெத்தா குளோன் என்ற சிந்​தடிக் போதைப்​பொருள் இருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, போதைப்​பொருளை பறி​முதல் செய்த அதி​காரி​கள், கடத்தி வந்த நபரை​யும், அதனை வாங்​கிச் செல்ல விமான நிலை​யத்​தில் காத்​திருந்​தவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x