Published : 18 Sep 2025 05:44 AM
Last Updated : 18 Sep 2025 05:44 AM

தி.நகரில் ரூ.4.45 லட்சம் பறிப்பு வழக்கு தலைமறைவாக இருந்த வழிப்பறி கொள்ளையன் கைது

வெங்​கடேசன்

சென்னை: தனி​யார் நிறுவன ஊழியரிடம் கத்​தி​முனை​யில் ரூ.4.45 லட்​சம் வழிப்​பறி செய்த வழக்​கில், தலைமறை​வாக இருந்த வழிப்​பறி கொள்​ளை​யனை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

சென்னை மண்​ணடி, மரைக்​காயர் தெரு​வில் வசித்து வருபவர் அப்​துல் அபு​தாகீர் (31). தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் டெலிவரிமேன் வேலை செய்து வரு​கிறார். இவர் கடந்த 2022 ஜூன் 9-ம் தேதி ரூ.4.45 லட்​சம் பணத்தை தி.நகர், பனகல் பார்க் அரு​கில் உள்ள ஏடிஎம் இயந்​திரத்​தில் டெபாசிட் செய்ய முயன்​ற​போது, இயந்​திரம் செயல்​பட​வில்​லை.

இதையடுத்​து, அந்த பணத்தை எடுத்​துக்​கொண்டு இருசக்கர வாக​னத்​தில் வீடு திரும்​பி​னார். வழி​யில் தி.நகர் ஜிஎன் செட்டி ரோடு மேம்​பாலத்​தில் 2 இருசக்கர வாக​னங்​களில் பின் தொர்ந்து வந்த 4 நபர்​கள் அப்​துல் அபு​தாகீரை வழிமறித்து கத்​தி​யால் தாக்கி அவரிட​மிருந்த பணப்​பையை பறித்​துக் கொண்டு தப்​பினர்.

காயம் அடைந்த அப்​துல் அபு​தாகீர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்ற பின்​னர், வழிப்​பறி தொடர்​பாக தேனாம்​பேட்டை காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி அக்​காவல் நிலைய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். முதல்​கட்​ட​மாக இவ்​வழக்​கில் தொடர்​புடைய சாருஹாசன், ரகு​மான், உதயகு​மார், ஷேக் அப்​துல்லா ஆகிய 4 பேரை அடுத்​தடுத்து கைது செய்​தனர்.

இவ்​வழக்​கில், 3 ஆண்​டு​களாக தலைமறை​வாக இருந்த கிழக்​குத் தாம்​பரம், இரும்​புலியூரைச் சேர்ந்த வெங்​கட் என்ற வெங்​கடேசனை (29) போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். விசா​ரணை​யில், வெங்​கடேசன் மீது ஏற்​கெனவே 23-க்​கும் மேற்​பட்ட குற்ற வழக்​கு​கள் உள்​ள​தாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x