Published : 18 Sep 2025 07:00 AM
Last Updated : 18 Sep 2025 07:00 AM

குழந்தை பெறாததால் பெண்ணை கொலை செய்த கணவர் குடும்பத்தினர்

ஜெய்ப்பூர்: ராஜஸ்​தான் மாநிலம், தீக் மாவட்​டம், கக்ரா கிராமத்​தைச் சேர்ந்த அசோக்​குக்​கும் ரவுனிஜா கிராமத்​தைச் சேர்ந்த சரளா​வுக்​கும் கடந்த 2005-ல் திரு​மணம் நடந்​துள்​ளது. இந்த தம்​ப​திக்கு குழந்தை இல்​லை. இதனால், அசோக் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் சரளாவை துன்​புறுத்தி வந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், சரளா வீட்​டில் ஏற்​பட்ட தீ விபத்​தில் உயி​ரிழந்ததாக கூறி உடலை அவசரமாக எரிக்க முயன்றுள்ளனர். கிராம மக்கள் மூலம் தகவல் அறிந்த போலீ​ஸார் விரைந்து சென்று சரளா​வின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

சரளா​வின் சகோ​தரர் விக்​ராந்த் கூறும்​போது, “என் சகோ​தரி குழந்தை பெற்​றுக்​கொள்​ள​வில்லை என்பதால் கொலை செய்​துள்​ளனர். அசோக் குடும்​பத்​தினர் மீது நடவடிக்கை எடுக்​க வேண்​டும்​’’ என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x