Published : 17 Sep 2025 06:12 AM
Last Updated : 17 Sep 2025 06:12 AM

மயிலாடுதுறை அருகே காதல் தகராறில் இளைஞர் கொலை: 15 பேர் கைது 

மயிலாடுதுறை: ​காதல் தகராறில் இளைஞரை வெட்​டிக் கொன்ற 5 பேரை மயி​லாடு​துறை போலீ​ஸார் கைது செய்​தனர். கொலையைக் கண்​டித்து பொது​மக்​கள் சாலை மறியலில் ஈடு​பட்​டனர். மயி​லாடு​துறை அரு​கே​யுள்ள அடியமங்​கலம் பெரிய தெரு​வைச் சேர்ந்​தவர் குமார் மகன் வைர​முத்​து(28). இருசக்கர வாகன பழுது நீக்​கும் தொழில் செய்து வந்​தார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்​ணும் காதலித்து வந்​தனர்.

இவர்களது காதலுக்கு பெண்​ணின் தாயார் எதிர்ப்​புத் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக தகராறு ஏற்​பட்​ட​தால், கடந்த 14-ம் தேதி போலீ​ஸார் இரு தரப்​பினரை​யும் அழைத்து பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

அப்​போது, அந்​தப் பெண் வைர​முத்​துவை திரு​மணம் செய்து கொள்​வேன் என உறு​தி​யாக கூறி​யுள்​ளார். இதனால், அந்​தப் பெண்ணிடம் குடும்​பத்​தினர் எழுதி வாங்​கிக் கொண்​டு, அங்​கிருந்து சென்​று​விட்​டனர். பின்​னர், அந்​தப் பெண் உறவினர் வீட்டில் தங்​கி​யிருந்​தார்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு வைர​முத்து பணி​முடிந்து மயி​லாடு​துறை​யில் இருந்து வீடு திரும்​பிய​போது, அடியமங்கலத்​தில் ஒரு கும்​பல் அவரை வழிமறித்து சரமாரி​யாக வெட்​டிக் கொலை செய்​து​விட்டு தப்​பி​விட்​டது. தகவலறிந்த மயிலாடு​துறை எஸ்​.பி. ஸ்டா​லின், டிஎஸ்பி பாலாஜி மற்​றும் போலீ​ஸார் அங்கு சென்று விசா​ரணை மேற்​கொண்​டனர்.

இந்​நிலை​யில், கொலை​யில் தொடர்​புடைய அனை​வரை​யும் கைது செய்ய வேண்​டும். பெண்​ணின் தாயார் மீது வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்ய வேண்​டும். வைர​முத்து குடும்​பத்​தா​ருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்​டும் என வலி​யுறுத்தி தீண்​டாமை ஒழிப்பு முன்​னணி மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​யினர் மற்​றும் வைர​முத்​து​வின் உறவினர்​கள் உள்​ளிட்​டோர் அரசு மருத்​து​வ​மனை அருகே சாலை மறியலில் ஈடு​பட்​டனர். அவர்​களிடம் பேச்​சு​வார்த்தை நடத்​திய போலீ​ஸார், உரிய நடவடிக்கை எடுப்​ப​தாக உறு​தி​யளித்​ததையடுத்து போராட்​டம் கைவிடப்​பட்​டது.

மற்றொரு சகோதரர் தலைமறைவு: இந்​தக் கொலை தொடர்​பாக வைர​முத்​து​வின் தாயார் ராஜலட்​சுமி அளித்த புகாரின்​பேரில் பெண்​ணின் சகோ​தரர் குகன்​(24), உறவினர் பாஸ்​கர்​(42) மற்​றும் சுபாஷ்(26), கவியரசன்​(23), அன்​புநி​தி(19) ஆகியோரை போலீ​ஸார் கைது செய்​தனர். மேலும், பெண்​ணின் மற்​றொரு சகோ​தரர் குணால் உள்​ளிட்​டோரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x