Published : 16 Sep 2025 05:55 AM
Last Updated : 16 Sep 2025 05:55 AM

சென்னை | பிஹார் இளைஞரை தாக்கி வீடியோ வெளியிட்ட 2 பேர் கைது

சென்னை: பிஹார் இளைஞரை கட்டி வைத்து தாக்​கி, அதை வீடியோ எடுத்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்ட இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். பிஹாரைச் சேர்ந்த இளைஞர் முகமது ஜூவேத். இவர், சென்னை வடபழனி​யில் தங்கி கறிக்​கடை ஒன்​றில் பணி செய்து வரு​கிறார். இவரை அதே மாநிலத்​தைச் சேர்ந்த சிலர் அறை​யில் அடைத்​து, கை, கால்​களை கட்டி தாக்​கினர். பின்​னர், அதை வீடியோ​வாக எடுத்து சமூகவலை தளங்​களில் வெளி​யிட்​டனர்.

இந்த விவ​காரம் குறித்​து, வடபழனி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில், முகமது ஜூவேத்​தை, அதே மாநிலத்​தைச் சேர்ந்த சவுரவ் தலை​மையி​லான கும்​பல் அடைத்து வைத்து தாக்கி வீடியோ எடுத்​தது தெரிந்​தது. இதையடுத்​து, சவுரவ் கூட்​டாளி​களான பிஹார் மாநிலத்​தைச் சேர்ந்த பைஜன் (18), முகமது டெடர் (22) ஆகிய இரு​வரை கைது செய்​தனர். தலைமறை​வாக உள்ள சவுரவை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

முன்​ன​தாக நடை​பெற்ற விசா​ரணை​யில், சவுரவ் மற்​றும் முகமது ஜூவேத் ஒரே வாடகை அறை​யில் தங்கி இருந்​தது தெரிந்​தது. அப்​போது, மது​போதை​யில் முகமது ஜூவேத், சவுரவை திட்டி உள்​ளார். இதனால், ஏற்​பட்ட ஆத்​திரத்​தில் பழி​வாங்​கும் வகை​யில் முகமது ஜூவேத்தை கட்டி வைத்து தாக்கி அதை வீடியோ​வாக சவுரவ் வெளி​யிட்​டுள்​ளார்​ என்​பது தெரிய வந்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x