Published : 16 Sep 2025 06:47 AM
Last Updated : 16 Sep 2025 06:47 AM

கோயம்பேடு சந்தையில் செல்போனை திருடிவிட்டு அவரிடமே மீண்டும் விற்பனை செய்ய முயன்ற திருடன் கைது

சந்தோஷ்

சென்னை: கோ​யம்​பேடு சந்​தை​யில், வியா​பாரி​யிடம் செல்​போன் திருடி​விட்​டு, அவரிடமே விற்க முயன்ற செல்​போன் திருடன் பிடிபட்​டார். தப்பி ஓடிய அவரது கூட்​டாளியை போலீ​ஸார் தேடிவரு​கின்​றனர்.

சென்னை கோட்​டூர், ஏரிக்​கரை சாலை​யைச் சேர்ந்​தவர் உமாசங்​கர் (43). கோயம்​பேட்​டில் காய்​கறிக் கடை நடத்தி வரு​கிறார். இவர் நேற்று முன்​தினம் காலை காய்​கறிக் கடைக்கு தேவை​யான காய்​கறிகளை அங்கு வாங்​கிக் கொண்​டிருந்​தார். அப்​போது அவரது விலை உயர்ந்த செல்​போனை யாரோ திருடிச் சென்​றனர்.

இதனால், வேதனை அடைந்த உமாசங்​கர் மாய​மான செல்​போன் குறித்து அங்​குள்​ளவர்​களிடம் விசா​ரித்​தார். கிடைக்​காத​தால் விரக்​தி​யில் அங்​கிருந்து அவரது கடைக்கு சென்​று, வழக்​கம்​போல் வியா​பாரத்தை கவனிக்க ஆரம்​பித்​தார்.

சிறிது நேரத்​தில் அங்கு 2 இளைஞர்​கள் வந்​தனர். வந்​தவர்​கள் செல்​போன் ஒன்றை உமாசங்​கரிடம் காண்​பித்​து, ‘அவசரத் தேவைக்கு பணம் தேவைப்​படு​கிறது. இதை வைத்​துக் கொண்டு பணம் கொடுங்​கள்’ என கேட்​டுள்​ளனர். அதை வாங்​கிப் பார்த்​த​போது, மாய​மான தனது போன் என உமாசங்​கருக்கு தெரிந்​தது.

சுதா​ரித்​துக் கொண்ட அவர், கடை பணி​யாளர்​களிடம் ரகசி​ய​மாக தெரி​வித்து செல்​போன் திருடர்​கள் இரு​வரை​யும் சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்​றார். ஒரு​வர் பிடிபட்ட நிலை​யில் மற்​றொரு​வர் தப்பி ஓடி​னார். பிடிபட்ட நபரை கோயம்​பேடு போலீஸாரிடம் ஒப்​படைத்​தனர்.

விசா​ரணை​யில் பிடிபட்​டது மாங்​காடு பகு​தி​யைச் சேர்ந்த சந்​தோஷ் (23) என்​பது தெரிய​வந்​தது. அவரை கைது செய்து சிறை​யில் அடைத்த போலீ​ஸார் தப்பி ஓடிய அவரது கூட்​டாளியைத் தேடி வரு​கின்​றனர். செல்​போனை திருடி​விட்​டு, யாரிடம் திருடினோம் எனத் தெரி​யாமல், திருடிய​வரிடமே செல்​போனை விற்க முயன்ற சம்​பவம் நகைப்பை ஏற்​படுத்​தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x