Published : 15 Sep 2025 05:56 AM
Last Updated : 15 Sep 2025 05:56 AM

நீதிமன்ற சாட்சிகளை மிரட்டுவதால் நடவடிக்கை: 5 பேர் சென்னை காவல் எல்லைக்குள் நுழைய தடை

சென்னை: தங்​களுக்கு எதி​ரான குற்ற வழக்​கு​களில் நீதி​மன்ற சாட்​சிகளை மிரட்​டு​வ​தால் 5 பேர் சென்னை காவல் எல்​லைக்​குள் நுழைய சென்னை காவல் ​துறை தடை விதித்​துள்​ளது. சென்னை காவல் எல்​லைக்குள் நுழைந்து பொது​மக்​களின் அமை​திக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய குற்​ற​வாளி​களை கண்டறிந்து அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் துறை ஆணை​யர் அருண் உத்​தரவிட்​டுள்​ளார்.

அந்​த வகை​யில், தங்​களுக்கு எதி​ரான குற்ற வழக்​கில் நீதி​மன்​றத்​தில் ஆஜராக வேண்​டிய சாட்​சிகளை மிரட்​டு​பவர்​களை கண்​டறிந்து அவர்​கள் சென்​னைக்​குள் நுழைய காவல்​துறை தடை விதித்​துள்​ளது.

அதன்​படி, சரித்​திர பதிவேடு குற்​ற​வாளி​களான பனையூரை சேர்ந்த அஜய் ரோகன்​(36), ராம​நாத​புரம் மாவட்​டம் பரமக்குடியை சேர்ந்த நாகேந்​திர சேதுப​தி(33), மதுரையை சேர்ந்த பிரேம்​கு​மார்​(45), திரு​வான்​மியூரை சேர்ந்த ராஜா(42), செல்​வ​பார​தி(26) ஆகிய 5 பேருக்கு வெளி​யேறு​தல் ஆணையை காவல் ஆணை​யர் அருண் பிறப்​பித்​துள்​ளார்.

இதன்​மூலம் 5 பேரும் நீதி​மன்ற வழக்​கு, காவல் ​துறை விசா​ரணை தவிர்த்​து, வேறு எந்த காரணத்​துக்​காக​வும் சென்னை காவல் எல்​லைக்​குள் நுழைய அடுத்த ஓர் ஆண்​டுக்கு தடை செய்​யப்​பட்​டுள்​ளது. மீறும் பட்​சத்​தில் அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என சென்னை காவல் ​துறை எச்​சரித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x