Published : 14 Sep 2025 12:58 PM
Last Updated : 14 Sep 2025 12:58 PM
சென்னை, கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தில் பிரபலமான நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் தொழில் வளர்ச்சிக்கு குறைந்த வட்டியில் ரூ.100 கோடி வரை கடன் பெற்று தருவதாக கவர்ச்சிக்கரமான விளம்பரங்களை வெளியிட்டது. இதை நம்பி தொழில் அதிபர் ஒருவர், சம்பந்தப்பட்ட நிதி நிறுவன இயக்குநர் ரகுவை அணுகி, ரூ.3 கோடி கடன் பெற்றுக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அவர், கடன் பெற்றுக் கொடுக்க கமிஷனாக ரூ.27 லட்சம் பெற்றுக் கொண்டார். ஆனால், உறுதி அளித்தபடி கடன் தொகையை பெற்றுக் கொடுக்காமலும், கமிஷனாக பெற்ற தொகையையும் திருப்பி தராமலும் ரகு ஏமாற்றி உள்ளார். இது தொடர்பாக, சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து குற்றச்சாட்டுக்கு உள்ளான ரகுவை கைது செய்தனர்.
இந்த நிறுவனத்தில் பணத்தை இழந்த பாதிக்கப்பட்டவர்கள், சென்னை பொருளாதார குற்றப் பிரிவில் புகார் தெரிவிக்கலாம் என போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT