Published : 14 Sep 2025 01:45 AM
Last Updated : 14 Sep 2025 01:45 AM

செங்கம் அருகே விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

திரு​வண்​ணா​மலை: செங்​கம் அருகே அரசுப் பேருந்​தும், பூ ஏற்​றிச் சென்ற வாக​ன​மும் நேருக்கு நேர் மோதி​ய​தில் 3 பேர் உயி​ரிழந்​தனர்.

திரு​வண்​ணா​மலை மாவட்​டம்செங்​கம் அடுத்த மண்​மலை பகு​தி​யில் விவ​சா​யிகளிட​மிருந்து கொள்​முதல் செய்​யப்​பட்ட பூக்​களை, பெங்​களூரு பூ மார்க்​கெட்​டுக்கு தின​மும் வாக​னங்​களில் கொண்​டு​செல்​வது வழக்​கம்.

அதன்​படி, திரு​வண்​ணா​மலை, கோலப்​பாடி, கண்​ணக்​குருக்​கை, உச்​சிமலைகுப்​பம், இறையூர் போன்ற பகு​தி​களில் நேற்று பூக்​களை சேகரித்​துக் கொண்​டு, பெங்​களூரு​வுக்கு சரக்கு வாக​னம் சென்று கொண்​டிருந்​தது. இதில் 3 பேர் சென்​றனர்.

மண்​மலை ஊராட்​சிக்கு உட்​பட்ட ஆணைமங்​கலம் பகு​தி​யில் சென்​ற​போது, சரக்கு வாக​ன​மும், எதிரே பெங்​களூரு​வில் இருந்து திரு​வண்​ணா​மலை நோக்கி வந்த அரசுப் பேருந்​தும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்​தில் சரக்கு வாகன ஓட்​டுந​ரான செங்​கம் அடுத்த பொரசப்​பட்டு கிராமத்​தைச் சேர்ந்த மணி(27) அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

மேலும், சரக்கு வாகன உரிமை​யாளர் கிருஷ்ணகிரி மாவட்​டம் ஊத்​தங்​கரை வட்​டம் பள்​ளத்​தூர் பகு​தி​யைச் சேர்ந்த ஆறு​முகம்​(45), கிருஷ்ணகிரி மாவட்​டத்​தைச் சேர்ந்த தொழிலாளி கோவிந்​த​ராஜ்(30) ஆகியோர் படு​கா​யம் அடைந்​தனர். அக்​கம்​பக்​கத்​தினர் காயமடைந்​தவர்​களை மீட்டு செங்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இரு​வரும் உயி​ரிழந்​தனர். பின்​னர் மூவரின் உடல்​களும் திரு​வண்​ணா​மலை அரசு மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்​பிவைக்​கப்​பட்​டன. விபத்து குறித்து செங்​கம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x