Published : 13 Sep 2025 06:39 AM
Last Updated : 13 Sep 2025 06:39 AM

கோயம்பேட்டில் அரசு பேருந்தை திருடி ஓட்டிச் சென்ற ஒடிசா இளைஞர்: ஆந்திராவில் பிடிபட்டார்

கைது செய்யப்பட்ட சாஹூ

சென்னை: கோ​யம்​பேட்​டில் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்த அரசு பேருந்​தை, திருடி ஓட்​டிச்​சென்ற ஒடிசா இளைஞரை ஆந்​தி​ரா​வில் வாகன சோதனை​யின்​போது போலீ​ஸார் கைது செய்து பேருந்தை மீட்​டனர். கோயம்​பேடு பணிமனை வாகன நிறுத்​தும் இடத்​தில் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்த, திருப்​பதி செல்​லும் தமிழக அரசு பேருந்து ஒன்று நேற்று முன்​தினம் காலை திருடு​போனது. அதிர்ச்சி அடைந்த கோயம்​பேடு பேருந்து பணிமனை கிளை மேலா​ளர் ராம்​சிங், சிஎம்​பிடி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​படி, போலீ​ஸார் வழக்​கு பதிந்து அப்​பகு​தி​யில் பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி கேமரா காட்​சிகளை ஆய்வு செய்​தனர். இதில் இளைஞர் ஒரு​வர் பேருந்தை திருடி, ஆந்​திரா நோக்கி ஓட்​டிச் சென்​றது தெரிய​வந்​தது. இதையடுத்​து, பேருந்து சென்ற வழித்​தடங்​களில் உள்ள கேமரா காட்​சிகள், திருடப்​பட்ட அரசு பேருந்​தில் உள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் கண்​காணித்து பின் தொடர்ந்​தனர். அப்​போது ஆந்​திர மாநில போலீ​ஸார், நெல்​லூர் பகு​தி​யில் வாகன சோதனை​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது அங்கு வந்த தமிழக அரசு பேருந்தை சந்​தேகத்​தின்​பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்​த​போது பேருந்தை ஓட்​டிவந்த இளைஞர் முன்​னுக்​குப்​பின் முரணாக பதில் அளித்​தார். இதையடுத்​து, பேருந்தை பறி​முதல் செய்த போலீ​ஸார் அவரிடம் விசா​ரணை நடத்​தினர். அப்​போது​தான் அது கோயம்​பேடு பணிமனையி​லிருந்து திருடப்​பட்ட அரசு பேருந்து என்​பது தெரிந்​தது.

இதுகுறித்து உடனடி​யாக அவர்​கள் சென்னை போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர். சிஎம்​பிடி போலீ​ஸார் ஆந்​திரா சென்​று, பேருந்தை மீட்​டனர். மேலும் பேருந்தை ஓட்​டிச் சென்றவர் ஒடிசா மாநிலம், கட்​டாக் பகு​தி​யைச் சேர்ந்த ஞானசஞ்​சன் சாஹூ (24) என்​பது தெரிய​வந்​தது. விசா​ரணை​யில் அவர் சற்று காது கேளாத, வாய் பேச முடி​யாத நபர் என்​பதும், ஊரை சுற்​றிப் பார்க்க வேண்​டும் என்ற ஆசை​யில் பேருந்தை திருடிச் சென்​றதும் தெரிய​வந்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். இவரது பின்​னணி தொடர்​பாக​வும் தொடர்ந்து விசா​ரித்து வருகின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x