Published : 13 Sep 2025 06:27 AM
Last Updated : 13 Sep 2025 06:27 AM

மாற்றுத் திறன் மாணவியிடம் செல்போனில் ஆபாசமாகப் பேசிய கல்லூரி பேராசிரியர் ‘சஸ்பெண்ட்’

நாகராஜன்

திருச்சி: ​திருச்சி மாவட்​டம் முசிறி​யில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்​லூரி​யில் தமிழ்த் துறை பேராசிரிய​ராக பணிபுரிந்து வந்​தவர் நாக​ராஜன். இவர், கல்​லூரி​யில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாற்​றுத் திறன் மாண​வி​யிடம் செல்போனில் ஆபாச​மாக பேசிய ஆடியோ சமூக வலை​தளத்​தில் பரவியது.

இதுதொடர்​பாக, அரசு கலைக் கல்​லூரி முதல்​வர் கணேசன் மற்​றும் கல்​லூரி உள் விவ​கார விசா​ரணைக் குழு​வினர் விசா​ரணை நடத்​தினர். தொடர்ந்​து, திருச்சி மண்டல கல்​லூரிக் கல்வி இணை இயக்​குநர் ராதாகிருஷ்ணன் மற்​றும் மாவட்ட சமூக நலத் துறை அலு​வலர்​கள் விசா​ரணை நடத்​தினர்.

இதையடுத்​து, துறைரீ​தி​யான விசா​ரணை அறிக்​கையை கல்​வித் துறை உயர் அலு​வலர்​களுக்கு கல்
​லூரிக் கல்வி மண்டல இணை இயக்​குநர் ராதாகிருஷ்ணன் அனுப்​பி​வைத்​தார். அதன்​பேரில், பேராசிரியர் நாக​ராஜனை ‘சஸ்பெண்ட்’ செய்து கல்​லூரிக் கல்வி ஆணை​யர் நேற்று உத்​தர​விட்​டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x