Published : 12 Sep 2025 07:07 AM
Last Updated : 12 Sep 2025 07:07 AM

மெடிக்கல் ஸ்கேன் சென்டர் நடத்த உள்​ளதாக மருத்துவ பேராசிரியர், தொழில் அதிபர் பெயரில் கடன் பெற்று ரூ.7 கோடி மோசடி: 2 பேர் கைது

ஏகன், தீபக் ஜெயின்

சென்னை: வடபழனியைச் சேர்ந்​த தொழில் அதிபர் ஒரு​வர், திருநெல்​வேலி கால்​நடை மருத்​துவக் கல்​லூரி​யில் பேராசிரிய​ராக பணிபுரி​யும் ஒரு​வர் என இரு​வர், சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளித்​திருந்​தனர்.

அதில், 2023-ம் ஆண்டு சென்னை கொளத்​தூரை சேர்ந்த ஏகன் (39), பார்க் டவுன் பகு​தி​யைச் சேர்ந்த தீபக் ஜெயின் (42) ஆகியோர் தங்கள் பெயரில் மெடிக்​கல் ஸ்கேன் சென்​டர் ஆரம்​பித்து நடத்த உள்​ள​தாக தெரி​வித்​தனர்.

அதற்கு தேவை​யான உபகரணங்​கள் வாங்க வேண்​டும் எனக் கூறி, நம்ப வைத்து கூட்டு ஒப்​பந்​தம் ஏற்​படுத்​தினர். இதில், முதலீடு செய்​தால் லாபத்​தில் பங்கு தரு​வ​தாக உறுதி அளித்​தனர். இதை உண்மை என நம்பி நாங்​கள் இரு​வரும் எங்​களது பெயரில் வங்கியில் கடன் பெற ஒப்​புதல் அளித்​தோம். அதன்​படி, ரூ.7 கோடி கடன் பெறப்​பட்​டது.

ஆனால், ஏகன் மற்​றும் தீபக் ஜெயின் இரு​வரும் மருத்​துவ உபகரணங்​கள் வாங்​காமல், வங்​கி​யில் எங்​களது பெயரில் வாங்​கிய கடன் தொகை​யை​யும் திருப்பி செலுத்​தாமல் ஏமாற்றி விட்​டனர். தற்​போது, வங்கி அதி​காரி​கள் எங்களுக்கு நெருக்​கடி கொடுக்கின்றனர்.

எனவே, எங்​களை ஏமாற்​றி, எங்​களது பெயரில் கூட்டு ஒப்​பந்​தம் மூலம் கடன் பெற்​று, ரூ.7 கோடி மோசடி​யில் ஈடு​பட்ட ஏகன், தீபக் ஜெயின் மற்​றும் அவர்​களுக்கு உடந்​தை​யாக இருந்​தவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என புகாரில் தெரி​வித்து இருந்தனர்.

இதுகுறித்​து, சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் விசா​ரணை நடத்த காவல் ஆணை​யர் அருண் உத்​தர​விட்​டார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில், மோசடி நடை​பெற்​றது தெரிய வந்​தது. இதையடுத்​து, புகாருக்​குள்​ளான இரு​வரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். இவ்​வழக்​கில் தொடர்​புடைய மேலும்​ சிலரை போலீ​ஸார்​ தேடி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x