Published : 12 Sep 2025 06:52 AM
Last Updated : 12 Sep 2025 06:52 AM

கள்ளக்குறிச்சி அருகே கூடா நட்பால் விபரீதம்: மனைவி, அவரது ஆண் நண்பர் கொலை - போலீசில் கணவர் சரண்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கொட்டாலம் கிராமத்தில் மனைவி லட்சுமி, அவரின் ஆண் நண்பர் தங்கராசு தலைகளை வெட்டி சாக்குப் பையில் வேலூர் மத்திய சிறை வளாகத்துக்கு கொண்டுவந்த கொளஞ்சியிடம் விசாரணை நடத்திய போலீஸார். உள்படம்: தங்கராசு, லட்சுமி | படம்: வி.எம்.மணிநாதன் |

கள்ளக்குறிச்சி: கள்​ளக்​குறிச்சி அருகே தனது மனை​வி, வேறு ஒரு​வருடன் கூடா நட்பு கொண்​டிருந்​ததை அறிந்த கணவர், மனைவி மற்​றும் ஆண் நண்​பரின் தலையை வெட்டிக் கொலை செய்​தார். பின்​னர், வெட்​டப்​பட்ட தலைகளைக் கொண்டு சென்று, காவல் நிலை​யத்​தில் சரணடைந்​தார்.

கள்​ளக்​குறிச்சி அடுத்த மலைகோட்​டாலம் கிராமத்​தைச் சேர்ந்​தவர் கொளஞ்சி (58). இவரது முதல் மனைவி கருத்து வேறு​பாடு காரண​மாக பிரிந்​து​விட்​டார். கடந்த 20 வருடங்​களுக்கு முன் கொளஞ்சி லட்​சுமி (40) என்​பவரை 2-வ​தாக திரு​மணம் செய்து​கொண்டார். இவர்​களுக்கு 3 மகள்​கள் உள்​ளனர்.

இந்​நிலை​யில், லட்​சுமிக்​கும், மலைக்​கோட்​டாலம் கிராமத்​தைச் சேர்ந்த தங்​க​ராசு (62) என்​பவருக்​கும் இடையே கூடா நட்பு இருந்துள்​ளது. இதையறிந்த கொளஞ்சி இரு​வரை​யும் எச்​சரித்​துள்​ளார். எனினும், அவர்​களது நட்பு தொடர்ந்​தது. இந்​நிலை​யில், கொளஞ்சி வீட்டு மொட்டை மாடி​யில், தங்​க​ராசு, லட்​சுமி ஆகியோர் தலை துண்​டிக்​கப்​பட்ட நிலை​யில் நேற்று இறந்து கிடந்​தனர்.

இரு​வரின் உடல்​கள் மட்​டும் அங்கு கிடந்​தன. துண்​டிக்​கப்​பட்ட தலைகளைக் காண​வில்​லை. தகவலறிந்து வந்த வரஞ்​சரம் போலீஸார், இரு​வரது உடல்​களை​யும் மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக கள்​ளக்​குறிச்சி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்தனர்.

இதற்​கிடையே, லட்​சுமி​யின் கணவர் கொளஞ்​சி, இரு​வரின் தலைகளை சாக்​குப் பையில் போட்டு எடுத்​துக் கொண்​டு, சரணடையும் நோக்​கில் வேலூர் மத்​திய சிறைக்​குச் சென்​றார். இதைக் கண்டு அதிர்ச்​சி​யடைந்த வேலூர் மத்​திய சிறைக் காவலர்கள், அவரை அருகில் உள்ள பாகா​யம் காவல் நிலை​யத்​தில் ஒப்படைத்​தனர்.

பின்​னர், காவல் நிலை​யத்​தில் சரணடைந்த கொளஞ்​சியை வரஞ்​சரம் போலீ​ஸார் கைது செய்​து, விசா​ரணைக்​காக கள்​ளக்​குறிச்சி அழைத்​துச் சென்​றனர். தொடர்ந்து விசா​ரணை நடந்து வரு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x