Published : 12 Sep 2025 06:40 AM
Last Updated : 12 Sep 2025 06:40 AM

திண்டிவனத்தில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 5 பேர் கைது

அருண்பிரகாஷ், பாலச்சந்திரன், பிரதீப்குமார், ராஜேஷ், மனோகரி

விழுப்புரம்: ​திண்​டிவனம் காவல் நிலை​யத்​தில் கஞ்சா போதை​யில் ரகளை​யில் ஈடு​பட்ட தாக பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்​டனர். விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனம் மேம்​பாலம் கீழே உள்ள பேருந்து நிறுத்​தத்​தில் கிடங்​கல் ராஜன் தெரு​வைச் சேர்ந்த ராஜேஷ் (26) என்​பவர் கஞ்சா போதை​யில் பயணி​களிடம் தகராறு செய்​து, பணம் பறிக்க முயன்​றுள்​ளார். தகவலறிந்து சென்ற காவலர் முரு​கையனை​யும் அவர் தாக்​கி​யுள்​ளார். தகவலறிந்த போலீ​ஸார் அவரை திண்​டிவனம் காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்​றனர்.

இதையறிந்த அவரது மனைவி மனோகரி (21), சகோ​தர்​கள் பாலாஜி (எ) பாலச்​சந்​திரன் (22), சேட்டு (எ) பிரதீப் குமார் (27) மற்​றும் நண்பர் அருண்​பிர​காஷ் (எ) சின்​ன​ராசு (20) ஆகியோர் காவல் நிலை​யத்​துக்​குச் சென்று ரகளை​யில் ஈடு​பட்​டனர்​. அவர்​கள் பிளேடால் அறுத்​துக் கொண்​டும், பெட்​ரோல் ஊற்றி தற்​கொலை செய்​து​கொள்​வ​தாக கூறி​யும் போலீ​ஸாரை மிரட்​டி​யுள்​ளனர். பெண் தலை​மைக் காவலர் மீனாட்​சி​யின் செல்​போன் மற்​றும் காவல் நிலை​யத்​தில் இருந்த மேஜை உள்​ளிட்ட பொருட்​களை சேதப்படுத்​தினர்.

அப்​போது, காவல் நிலை​யம் அரு​கே​யுள்ள ரயில்வே மேம்​பாலத்​தின் மீது ஏறி, அங்​கிருந்து கீழே குதித்து தப்​பித்​துச் செல்ல முயன்ற ராஜேஷுக்கு காலில் முறிவு ஏற்​பட்​டது. பின்​னர் அவர் திண்​டிவனம் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். நீண்ட போராட்டத்​துக்​குப் பின்​னர் அனை​வரை​யும் போலீ​ஸார் கட்​டுப்​படுத்​தினர்.

இது தொடர்​பாக தலை​மைக் காவலர் மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் திண்​டிவனம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, 5 பேரையும் கைது செய்​துள்​ளனர். இவர்​கள் மீது ஏற்​கெனவே பல்​வேறு வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ள​தாக​வும், அதீத கஞ்சா போதையால் இவ்​வாறு நடந்து கொண்​ட​தாக​வும் போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x