Published : 11 Sep 2025 06:00 AM
Last Updated : 11 Sep 2025 06:00 AM

வீட்டுமனைகள் தருவதாக 26 பேரிடம் ரூ.4 கோடி மோசடி: சகோதரிகள் இருவர் கைது

அம்​சவேணி, லட்​சுமி

சென்னை: வீட்​டுமனை​கள் தரு​வ​தாகக் கூறி 26 பேரிடம் ரூ.3.71 கோடி பணம் பெற்று மோசடி செய்​த​தாக சகோ​தரி​கள் இரு​வரை பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்​தனர். சென்னை தி.நகர் ராமகிருஷ்ணா தெருவில் கடந்த 2019-ம் ஆண்​டு​ முதல் 2021 வரை ரியல் எஸ்​டேட் நிறு​வனம் ஒன்று இயங்கி வந்​தது.

இந்​நிறு​வனத்​தின் இயக்​குநர்​களாக அப்​பகு​தி​யை சேர்ந்த சகோ​தரி​களான அம்​சவேணி, லட்​சுமி ஆகியோர் செயல்​பட்டு வந்​தனர். இந்​நிறு​வனம், குறிப்​பிட்ட தொகை முதலீடு செய்​தால், வீட்​டுமனை​கள் தரு​வ​தாக விளம்​பரம் செய்​த​தாக கூறப்​படு​கிறது. இதையடுத்​து, பொது​மக்​கள் பலர் இந்​நிறு​வனத்​தில் முதலீடு செய்து வந்​தனர்.

ஆனால், அவர்​கள் உறு​தி​யளித்​த​படி வீட்​டு மனை​களை வழங்​காமலும், முதலீடு செய்த பணத்தை திரும்​பக் கொடுக்​காமலும் ஏமாற்​றிய​தாகக் கூறப்​படு​கிறது. இதையடுத்​து, அந்​நிறு​வனத்​தில் முதலீடு செய்​திருந்த 26 பேர், அசோக் நகரில் உள்ள பொருளா​தா​ரக் குற்​றப்​பிரிவு போலீ​ஸில் புகார் அளித்​தனர். புகாரின் பேரில் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரித்து வந்​தனர்.

விசா​ரணை​யில் 26 பேரிடம் ரூ.3 கோடியே 71 லட்​சம் பணம் மோசடி செய்​தது தெரிய​வந்​தது. இதையடுத்து சகோ​தரி​கள் இரு​வரை​யும் கைது செய்த போலீ​ஸார் புழல் சிறை​யில் அடைத்​தனர். மேலும், இது​போல் இந்​நிறு​வனத்​தில் முதலீடு செய்து பணத்தை பறி​கொடுத்​தவர்​கள் புகார் அளிக்​கலாம் என பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x