Published : 11 Sep 2025 06:22 AM
Last Updated : 11 Sep 2025 06:22 AM

ஆந்திராவைச் சேர்ந்த குடும்பத்தினர் கிருஷ்ணகிரி அணையில் குதித்து 2 பேர் தற்கொலை, 2 பெண்கள் மீட்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை​யில் குதித்து ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 4 பேர் தற்​கொலைக்கு முயன்​றனர். இதில் 2 பேர் உயி​ரிழந்​தனர். ஆந்​திர மாநிலம் குப்​பம் புதுப்​பேட்டை ஏ.பி. சாலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் லட்​சுமண மூர்த்தி (50). தனி​யார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜோதி (40), மகள் கிருத்​திகா (20). இவர்​களு​டன் ஜோதி​யின் தாய் சார​தாம்​மாளும் (75) வசித்து வந்​தார்.

இந்​நிலை​யில், நேற்று 4 பேரும் கிருஷ்ணகிரி அணைக்கு வந்​தனர். அங்கு சிறிய மதகின் முன்​பகு​தி​யில் ஒவ்​வொரு​வ​ராக நீரில் குதித்​தனர். அங்கு மீன் பிடித்​துக் கொண்​டிருந்​தவர்​கள் அவர்​களைக் காப்​பாற்ற முயன்​றனர். இதில், கிருத்​தி​கா, ஜோதி ஆகியோர் மீட்​கப்​பட்​டனர். லட்​சுமண மூர்த்​தி, சார​தாம்​மாள் ஆகியோர் நீரில் மூழ்கி உயி​ரிழந்​தனர்.

தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி அணை போலீ​ஸார், உயி​ரிழந்த இரு​வரின் உடல்​களை​யும் மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக கிருஷ்ணகிரி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். மேலும், கிருத்​தி​கா, ஜோதி ஆகியோர் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்டனர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “கிருத்​தி​கா​வுக்கு கடந்த வாரம் திரு​மணம் நிச்​ச​யமான நிலை​யில், அவருக்கு திரு​மணத்​தில் விருப்​பமில்​லை. இது தொடர்பாக குடும்​பத்​தில் ஏற்​பட்ட பிரச்​சினை​யில், அனைவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்​துள்​ளனர். வேறு ஏதேனும் காரணம் உள்​ளதா என்​றும் விசாரித்து வருகிறோம்” என்​றனர்.

தற்​கொலை எண்​ணம்​... எந்​த பிரச்​சினைக்கும் தற்​கொலை தீர்வு கிடை​யாது. தற்​கொலை எண்​ணத்​துக்கு தீர்வு தேட சினேகா தற்​கொலை தடுப்பு உதவி எண்: 044 -24640000, மாநில தற்​கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் உதவி எண் 022-25521111 ஆகிய​வற்​றில்​ தொடர்​பு ​கொள்​ளலாம்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x