Published : 10 Sep 2025 06:43 AM
Last Updated : 10 Sep 2025 06:43 AM

பேரூராட்சி தலைவர் கொலை முயற்சி வழக்கில் போலீஸாரால் தேடப்பட்ட இளைஞர் தற்கொலை

லட்சுமணன்

கும்பகோணம்: ஆடு​துறை பேரூ​ராட்​சித் தலை​வர் கொலை முயற்சி வழக்​கில் போலீ​ஸா​ரால் தேடப்​பட்ட இளைஞர் தூக்​கிட்​டுத் தற்கொலை செய்து கொண்​டார். கும்​பகோணம் அடு​த்த ஆடு​துறை பேரூ​ராட்​சித் தலை​வ​ராக (பாமக) இருப்​பவர் ம.க.ஸ்​டா​லின். இவரை கடந்த 5-ம் தேதி ஒரு கும்​பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்​றது. இது தொடர்​பாக தனிப்​படை போலீ​ஸார் தீவிர விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், உடை​யாளூர் புதுத்​தெரு​வைச் சேர்ந்த லட்​சுமணன்​(30) என்​பவர், கொலை முயற்​சி​யில் ஈடு​பட்ட கும்​பலுக்கு நாட்டு வெடிகுண்​டு​களை தயாரித்​துக் கொடுத்​த​தாக தகவல் கிடைத்​துள்​ளது. அதன்​பேரில், லட்​சுமணனிடம் விசா​ரணை நடத்​து​வதற்​காக 2 நாட்​களுக்கு முன் உடை​யாளூருக்கு போலீ​ஸார் சென்​ற​போது, அங்கு லட்​சுமணன் இல்​லை.

இந்​நிலை​யில், லட்​சுமணன் உடை​யாளூரில் உள்ள வீட்​டில் இருப்​ப​தாக கிடைத்த தகவலின்​பேரில் நேற்று முன்​தினம் இரவு போலீ​ஸார் அங்கு சென்​றனர. அப்​போது, வீட்​டின் கதவு உள்​பக்​க​மாக பூட்​டப்​பட்​டிருந்​தது. இதையடுத்​து, போலீ​ஸார் கதவை உடைத்து உள்ளே சென்​ற​போது, லட்​சுமணன் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் இறந்து கிடந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீ​ஸார், பிரேதப் பரிசோதனைக்​காக கும்​பகோணம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர்.

மேலும், இதுகுறித்து பட்​டீஸ்​வரம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரித்து வரு​கின்​றனர். இது தொடர்​பாக ம.க.ஸ்​டா​லின் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறும்​போது, “லட்​சுமணன் உயி​ரிழப்​பில் பல சந்​தேகங்​கள் உள்​ளன. போலீ​ஸாரின் கவனத்தை திசை திருப்ப அந்த கும்​பல் லட்​சுமணனை கொலை செய்​திருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுகிறது" என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x