Published : 09 Sep 2025 11:25 AM
Last Updated : 09 Sep 2025 11:25 AM

ரிதன்யா வழக்கை திருப்பூர் எஸ்பி கண்காணிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட அவிநாசி ரிதன்யா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை திருப்பூர் எஸ்பி கண்காணிக்க உத்தரவி்ட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண்ணான ரிதன்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கைதான ரிதன்யாவி்ன் கணவரான கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது மகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட வழக்கை உள்ளூர் போலீஸார் குற்றம் சாட் டப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து முறையாக விசாரிக்கவில்லை.

குறிப்பாக கவின்குமாரின் மொபைல் போன் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. எனவே எனது மகளை தற்கொலைக்கு தூண்டிய இந்த வழக்கை சிபிஐ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையிலான சிறப்பு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜராகி, இந்த வழக்கை போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை என்றும், இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், ‘‘ரிதன்யாவின் கணவர் கவினின் மொபைல் போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சிபிஐ-க்கு மாற்ற வேண்டிய தேவையில்லை.

அவ்வாறு சிபிஐ அல்லது வேறு அமைப்புக்கு மாற்றினாலும் எந்த பலனும் இருக்காது. எனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததும், உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை திருப்பூர் எஸ்பி தனது நேரடி கட்டுப்பாட்டில் கண்காணிக்க வேண்டும், எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x