Published : 09 Sep 2025 05:51 AM
Last Updated : 09 Sep 2025 05:51 AM

காஞ்சிபுரம் டி.எஸ்.பி சங்கர் கணேஷ் கைது: நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நடவடிக்கை

டி.எஸ்.பி சங்கர் கணேஷ்

காஞ்சிபுரம்: தீண்​டாமை வன்​கொடுமை தடுப்​புச் சட்ட வழக்கை சரிவர கையாளாத காரணத்​தால், டி.எஸ்​.பி சங்​கர் கணேஷை கைது செய்ய நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. இதைத் தொடர்ந்து அவர் நீதி​மன்ற வளாகத்​திலேயே சீருடை​யுடன் கைது செய்யப்பட்டார்.

வாலாஜா​பாத் அருகே உள்ள நத்​தப்​பேட்​டையைச் சேர்ந்​தவர் சிவக்​கு​மார். இவர் பேக்​கரி கடை வைத்​துள்​ளார். இவரது கடைக்கு வந்த பூசி​வாக்​கத்​தைச் சேர்ந்த முரு​கன், தேநீர் குடிக்​கும்​போது தேநீர் சரி இல்லை என்று கேட்​டது தொடர்​பாக தகராறு ஏற்பட்டுள்ளது. சிவக்​கு​மாரின் மரு​மகன் லோகேஷ் காவல்​துறை​யில் பணி புரி​கிறார். இந்த தகராறை கேள்​விப்​பட்ட லோகேஷ், சிலருடன் வந்து முரு​கனை தாக்​கிய​தாக கூறப்​படு​கிறது.

இது தொடர்​பாக முரு​க​னின் மனைவி பத்​மாவதி வாலாஜா​பாத் காவல் நிலை​யத்​தில் புகார் கொடுத்​தார். லோகேஷின் மாம​னார் சிவக்​கு​மார் உள்​ளிட்​டோர் மீது தீண்​டாமை வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தில் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. ஆனால் காவல்​துறை​யில் பணி செய்​யும் லோகேஷ் மீது எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை.

இதனைத் தொடர்ந்து முரு​கன் தரப்​பில் தாங்​கள் கொடுத்த புகார் மீது முறை​யான நடவடிக்கை எடுக்​கக் கோரி காஞ்​சிபுரம் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​தனர். இந்த வழக்கை காஞ்​சிபுரம் மாவட்ட முதன்மை நீதி​மன்ற நீதிபதி ப.உ.செம்​மல் விசா​ரித்து வந்​தார். இந்த வழக்கு தொடர்​பாக காஞ்​சிபுரம் டி.எஸ்​.பி சங்​கர் கணேஷ் நேற்று நீதி​மன்​றத்​தில் ஆஜரா​னார்.

இந்த வழக்​கில் காவல்​துறையைச் சேர்ந்​தவர் சம்​பந்​தப்​பட்​டுள்​ள​தால் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என்​பது​போல் குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தன. இந்த வழக்கை சரி​யாக கையாளாத குற்​றச்​சாட்​டில் தீண்​டாமை வன்​கொடுமை தடுப்​புச் சட்​டப்​படி டி.எஸ்.பி. சங்​கர் கணேஷை கைது செய்ய நீதிபதி செம்​மல் உத்​த​விட்​டார்.

இதனைத் தொடர்ந்து டி.எஸ்​.பி சங்​கர் கணேஷ் சீருடையுடன் நீதி​மன்ற வளாகத்​திலேயே கைது செய்​யப்​பட்​டார். அவரை செப்​.22-ம் தேதிவரை நீதி​மன்​றக் காவலில் வைக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. தீண்​டாமை வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தில் நடவடிக்கை எடுக்க வேண்​டிய வழக்கை சரிவர கையாள​வில்லை என்​ப​தற்​காக காவல்​துறை அதி​காரி ஒரு​வர் கைது செய்​யப்​பட்ட சம்​பவம் காஞ்​சிபுரம் பகு​தி​யிலும், காவல்​துறை வட்​டாரத்​தி​லும் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இந்த வழக்கைத் தொடர்ந்து காஞ்​சிபுரம் நீதி​மன்​றத்​தில் போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்​தச் சம்​பவம் குறித்து காஞ்​சிபுரம் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் கி.சண்​முகத்​திடம் கேட்​ட​போது, “எந்த அடிப்​படை​யில் டி.எஸ்​.பி. சங்​கர் கணேஷ் கைது செய்​யப்​பட்​டுள்​ளார் என்​பது தெரிய​வில்​லை. காவல்​துறை தரப்​பில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாட உள்​ளோம்” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x