Published : 08 Sep 2025 07:49 AM
Last Updated : 08 Sep 2025 07:49 AM

திருச்செந்தூர் கோயில் அதிகாரி - காவலர் மோதல்: நடந்தது என்ன?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவலர் பிரபாகரன் மற்றும் கோயில் கண்காணிப்பாளர் விவேக்.

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் கண்​காணிப்​பாளர் மற்​றும் கோயில் காவலரிடையே கடும் மோதல் ஏற்​பட்​டது. இதில் காயமடைந்த இரு​வரும் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். சிவகங்கை மாவட்​டம் திரு​மாஞ்​சோலை அரசனூரைச் சேர்ந்​தவர் விவேக் (34). இவர், திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் உள்​துறை கண்​காணிப்​பாள​ராகப் பணி​யாற்றி வரு​கிறார். இந்​நிலை​யில், நேற்று விடு​முறை தினம் என்​ப​தால் கோயில் தரிசன வரிசைகளில் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

இந்​நிலை​யில், குலசேகரன்​பட்​டினம் காவல் நிலை​யத்​தில் பணி​யாற்றி வரும் காவலர் பிர​பாகரன் (40), சிறப்பு பணிக்​காக திருச்​செந்​தூர் கோயில் புறக்​காவல் நிலை​யத்​தில் இருந்​தார். அப்​போது, அவர் தனக்கு வேண்​டிய​வர்​களை மூத்த குடிமக்​கள் செல்​லும் தரிசன வழி​யில் அனுப்பி வைத்​த​தாகக் கூறப்​படு​கிறது.

அங்கு வந்த கோயில் கண்​காணிப்​பாளர் விவேக், பேரி​கார்டை வைத்து தடுப்பு ஏற்​படுத்​தி​ய​தாக கூறப்​படு​கிறது. இதனால் விவேக் மற்​றும் காவலர் பிர​பாகரன் ஆகியோ​ருக்​கிடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. வாக்​கு​வாதம் முற்​றிய நிலை​யில், காவலர் பிர​பாகரன், விவேக்கை தாக்​கி​யுள்​ளார். விவேக்​கும் பதி​லுக்கு தாக்​கி​யுள்​ளார்.

பின்​னர், கோயில் கண்​காணிப்​பாளர் விவேக்​கை, புறக்​காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்​று, காவலர் பிர​பாகரன் மற்​றும் சிலர் கடுமை​யாக தாக்​கிய​தாக கூறப்​படு​கிறது. பலத்த காயமடைந்த விவேக் திருச்​செந்​தூர் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். பின்​னர், மேல் சிகிச்​சைக்​காக தூத்​துக்​குடி அரசு மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டார்.

இதற்​கிடையே காவலர் பிர​பாகரனும் திருச்​செந்​தூர் அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்கு அனு​ம​திக்​கப்​பட்​டார். கோயில் உள்​துறை கண்​காணிப்​பாளர் விவேக் மற்​றும் காவலர் பிர​பாகரன் கைகலப்​பில் ஈடு​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. இந்த சம்​பவம் குறித்து கோயில் காவல் ஆய்​வாளர் கனக​ராஜன் வி​சா​ரணை நடத்தி வரு​கிறார். மோதல் குறித்த வீடியோ சமூக வலை​தளங்​களில்​ வேக​மாகப்​ பரவி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x