Published : 06 Sep 2025 07:37 AM
Last Updated : 06 Sep 2025 07:37 AM

பாமக மாநில நிர்வாகி ம.க.ஸ்டாலினை நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி

பேரூராட்சித் தலைவர் மீதான கொலை முயற்சியைக் கண்டித்து நேற்று ஆடுதுறையில் சாலை மறியலில் ஈடுபட்டோர். (உள்படம்) ம.க.ஸ்டாலின்.

கும்பகோணம்: ​பாமக மாநில நிர்​வாகி​யும், ஆடு​துறை பேரூ​ராட்சி தலை​வரு​மான ம.க.ஸ்​டா​லினை நேற்று ஒரு கும்​பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்​றது பரபரப்பை ஏற்​படுத்தி உள்​ளது. தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​விடைமருதூர் வட்​டம் ஆடு​துறை மேல மருத்​து​வக்​குடியைச் சேர்ந்​தவர் ம.க.ஸ்​டா​லின்.

ஆடு​துறை பேரூ​ராட்​சித் தலை​வ​ரான இவர், பாமக மாநில நிர்​வாகக் குழு உறுப்​பின​ராக உள்​ளார். இந்​நிலை​யில், நேற்று பேரூ​ராட்சி அலு​வல​கத்​தில் உள்ள தனது அறை​யில் ஸ்டாலின் அ மர்ந்திருந்தார்.

அவரது ஆதர​வாளர்​கள் இளை​ய​ராஜா(42), அருண்​(25) ஆகியோர் வெளியில் இருந்தனர். திடீரென ஒரு காரில் வந்த 8 பேர் முகமூடி அணிந்து அலு​வல​கத்​துக்​குள் புகுந்​து, நாட்டு வெடிகுண்​டு​களை வீசினர். இதில் அலு​வல​கத்​தில் இருந்த நாற்​காலி, கண்​ணாடிகள் சேதமடைந்​தன.

தொடர்ந்​து, அலு​வல​கத்​துக்​குள் நுழைய முயன்ற கும்​பலைத் தடுக்க முயன்ற இளை​ய​ராஜா, அருண் ஆகியோரை அரி​வாளால் வெட்​டினர். இதையறிந்த ம.க.ஸ்​டா​லின் ஓசை​யின்றி தனது அறை​யில் உள்ள கழிப்​பறைக்​குள் சென்​று​விட்​டார். அவர் இருக்​கை​யில் இல்​லாததை அறிந்த அக்​கும்​பல் அங்​கிருந்து காரில் தப்​பிச் சென்​று​விட்​டது.

சாலை மறியல், கடையடைப்பு: இதுகுறித்து தகவலறிந்த ம.க.ஸ்​டா​லினின் ஆதர​வாளர்​கள் பேரூ​ராட்சி அலு​வல​கம் முன் திரண்​டனர். மேலும், ஆடு​துறை, திரு​மங்​கலக்​குடி சாலைகளில் மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். மேலும், அப்​பகு​தி​யில் 300-க்​கும் மேற்​பட்ட கடைகள் அடைக்​கப்​பட்​டன.

தகவலறிந்து வந்த தஞ்​சாவூர் எஸ்​.பி. ராஜா​ராம் மற்​றும் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர். மேலும், 100-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் ஆடு​துறை​யில் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். இந்த கொலை முயற்​சிக்கு காரணம் முன்​விரோதமா அல்​லது உட்​கட்​சிப் பிரச்​சினையா என்று போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

இதுகுறித்து ம.க.ஸ்​டா​லின் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “எனக்கு கொலை மிரட்​டல், அச்​சுறுத்​தல் இருப்​பது தெரிந்​தும் போலீ​ஸார் பாது​காப்பு அளிக்​க​வில்​லை. ஏற்​கெனவே வழங்​கிய பாது​காப்​பை​யும் திரும்ப பெற்று விட்​டனர். கொலை முயற்சி தொடர்​பாக முறை​யாக விசா​ரிக்க வேண்​டும்" என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x