Published : 05 Sep 2025 06:52 AM
Last Updated : 05 Sep 2025 06:52 AM

ஆன்லைன் வர்த்தகத்தில் இரட்டிப்பு லாபம் என தொழில் அதிபரை ஏமாற்றி ரூ.2.26 கோடி மோசடி

பூர்னேஷ்

சென்னை: சென்னை தி.நகரில் வசிப்​பவர் பிரபல தொழில் அதிபர் கிஷோர். இவரது செல்​போன் வாட்​ஸ்​-அப் எண்​ணுக்கு வந்த செய்தியில், எங்​களது வாட்​ஸ்​-அப் குழு​வில் சேர்ந்து நாங்​கள் ஆலோ​சனை கூறும் பங்கு வர்த்​தகத்​தில் முதலீடு செய்​தால் இரட்​டிப்பு லாபம் கிடைக்​கும் எனக் குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

இதை உண்மை என நம்​பிய கிஷோர், அந்த வாட்​ஸ்​-அப் குழு​வில் சேர்ந்​துள்​ளார். பின்​னர் மோசடி நபர்​கள் அனுப்​பிய லிங்க் (Link) மூல​மாக ஆன்​லைன் பங்கு வர்த்​தகம் செய்ய பல்​வேறு வங்​கிக் கணக்​கு​களில் பல பரிவர்த்​தனை​களில் ரூ.2 கோடியே 26 லட்​சம் பணம் அனுப்பி முதலீடு செய்ய அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

ஆனால், அவருக்கு லாபப் பணமும் கிடைக்​க​வில்லை; முதலீடு செய்த பணமும் திரும்​பக் கிடைக்​க​வில்​லை. இது தொடர்​பாக சென்னை மத்​திய குற்​றப்​ பிரி​வில் உள்ள சைபர் க்ரைம் போலீ​ஸாரிடம் கிஷோர் புகார் தெரி​வித்​தார். அதன்​பேரில் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். முதல் கட்​ட​மாக மோசடி கும்​பலின் கூட்​டாளி​கள் திருநெல்​வேலி மற்​றும் தென்​காசி பகு​தி​களில் பதுங்​கி​யிருப்​பது தெரிந்​தது.

இதையடுத்து அங்கு விரைந்த போலீ​ஸார் அந்த மாவட்​டங்​களைச் சேர்ந்த சத்​தி​ய​ நா​ராயணன் (60), மணிவேல் (25), ரோஷன் (35), சிம்​சேன் செல்​லதுரை(26), ஆதனன் (27), அப்​சர் சவு​கான் ஆகிய 6 பேரை அடுத்​தடுத்து கைது செய்​தனர். இந்த வழக்​கில் தலைமறைவாக இருந்த கோயம்​புத்​தூர் மாவட்​டம், திரு​வள்​ளுவர் நகர், ஒண்​டிப்​புதூர் சாலை பகு​தி​யைச் சேர்ந்த பூர்​னேஷ் (26) என்​பவரை தற்​போது போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். அவர் மோசடி பணத்​தில் வாங்​கிய சொகுசு கார் மற்​றும் செல்​போனும் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இவ்​வழக்​கில் தொடர்​புடைய மேலும் சிலரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x