Published : 02 Sep 2025 07:47 AM
Last Updated : 02 Sep 2025 07:47 AM

திருச்சி அருகே பழுதாகி நின்ற பேருந்து மீது கார் மோதி தாய், குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு

திருச்சி அருகே சிறுகனூர் நெடுங்கூரில் நேற்று அதிகாலையில் நின்று கொண்டிருந்த பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளான கார்.

திருச்சி: ​திருச்சி அருகே தேசிய நெடுஞ்​சாலை​யில் பழு​தாகி நின்ற அரசு பேருந்து மீது பின்​னால் அதிவேக​மாக வந்த கார் மோதிய விபத்​தில் தாய், குழந்தை உட்பட 3 பேர் உயி​ரிழந்​தனர். தென்​காசி மாவட்​டம் ஆலங்​குளம் பகு​தியைச் சேர்ந்​தவர் ஜோசப்​(21). சென்​னை​யில் தங்கி வாடகை கார் ஓட்டி வரு​கிறார். தென்​காசி​யில் ஆக.30-ம் தேதி நடை​பெற்ற திருமண நிகழ்ச்​சி​யில் ஜோசப் பங்​கேற்​று​விட்டு மீண்​டும் சென்னை செல்​வதற்​காக நேற்று முன்​தினம் இரவு ஆலங்​குளத்​தில் இருந்து காரில் புறப்​பட்டு உள்​ளார்.

அப்​போது, ஜோசப்பின் நண்​பர்​களான ஆலங்​குளத்தைச் சேர்ந்த செல்​வகு​மார்​(37), அவரது மனைவி யசோ​தா(29), இவர்​களது மகள் அனோனி​யா(2), மற்​றொரு நண்​ப​ரான விஜய​பாபு (31) ஆகியோ​ரும் உடன் சென்​றனர். இவர்​கள் நேற்று அதி​காலை 2 மணி​யள​வில், திருச்சி மாவட்​டம் சிறுக​னூரை அடுத்த நெடுங்​கூர் அருகே சென்​ற​போது, அங்கு பழு​தாகி நின்று கொண்​டிருந்த அரசுப் பேருந்​தின் பின் பகு​தி​யில் கார் பயங்​கர​மாக மோதி​யது.

இதில், யசோ​தா, அவரது மகள் அனோனி​யா, விஜய​பாபு ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். கார் ஓட்​டுநர் ஜோசப், செல்​வகு​மார் ஆகியோர் படு​காயமடைந்​தனர். தகவலறிந்த சிறுக​னூர் போலீ​ஸார் அங்கு விரைந்து சென்று, விபத்​தில் காயமடைந்த இரு​வரை​யும் மீட்டு திருச்சி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

டிஎஸ்பி தினேஷ்கு​மார், சிறுக​னூர் காவல் ஆய்​வாளர் குணசேகரன் சம்பவ இடத்​தில் விசா​ரணை மேற்​கொண்​டனர். இதில், கார் ஓட்டுநர் கண் அயர்ந்​த​தால் இந்த விபத்து நேரிட்​டது முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. மேலும் பழு​தாகி நின்ற பேருந்​தின் பின்​பக்​கம் சிவப்பு விளக்கு எரிய​வில்லை என்​றும் கூறப்​படு​கிறது. இந்த சம்​பவம் குறித்து போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்​டு வருகின்றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x