Published : 01 Sep 2025 10:44 AM
Last Updated : 01 Sep 2025 10:44 AM

திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி இளைஞர் கொலை!

திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி இளைஞர் கொலை திருவள்ளூர் கடம்​பத்​தூர் பகு​தி​யில் மர்ம கும்​பலால் இளைஞர் ஒரு​வர் நாட்டு வெடிகுண்​டு​களை வீசி​யும், கத்​தி​யால் வெட்​டி​யும் கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

திரு​வள்​ளூர் அடுத்த கடம்​பத்​தூர் பகு​தியை சேர்ந்​தவர் சுரேஷ் மகன் ராஜ்கமல் (28). தனி​யார் நிறுவன ஊழிய​ரான இவர், கடந்த 3 மாதங்​களுக்கு முன்பு வெள்​ளவேடு பகு​தியை சேர்ந்த பெண் ஒரு​வரை காதல் திரு​மணம் செய்து கொண்​டு, கடம்​பத்​தூர் அருகே உள்ள அகரம் பகு​தி​யில் வசித்து வந்​தார்.

இந்​நிலை​யில், ராஜ்கமல் தன் நண்​பர் ஒரு​வருடன் நேற்று முன்தினம் இரவு கடம்​பத்​தூர் பகு​தி​யில் உள்ள மளிகை கடை ஒன்​றில் அரிசி மூட்​டையை வாங்கி கொண்டு பைக்​கில் அகரத்​துக்கு சென்று கொண்​டிருந்​தார். அப்​போது, மர்ம கும்​பல் ஒன்​று, ராஜ்கமல் உள்​ளிட்ட இரு​வரை​யும் பின் தொடர்ந்து சென்​று, இரு இடங்​களில் ராஜ்கமல் மற்​றும் அவரது நண்​பர் மீது நாட்டு வெடிகுண்​டு​களை வீசி​யுள்​ளது. அந்த இடங்​களில் ராஜ்கமல் உள்​ளிட்ட இரு​வரும் தப்​பித்து வேக​மாக பைக்​கில் சென்​றுள்​ளனர். அவர்​களை விடா​மல் துரத்​திச் சென்று 3-வது இடமான, கடம்​பத்​தூர் அடுத்த கசவநல்​லாத்​தூர் ஏரிக்​கரை பகு​தி​யில், மர்ம கும்​பல் நாட்டு வெடிகுண்​டு​களை வீசி​யுள்​ளனர்.

அப்​போதும் தப்​பிக்க முயற்சி செய்த ராஜ்கமல் மற்​றும் அவரது நண்​பரை மர்ம கும்​பல் ஓட, ஓட விரட்டி சென்று மடக்​கியது. பிறகு, அக்​கும்​பல், ராஜ்கமலை, தலை, கால் உள்​ளிட்ட இடங்​களில் வெட்டி கொலை செய்து விட்டு தப்​பியோடியது. மேலும், ராஜ்கமலை வெட்ட வந்​தவர்​களை தடுக்க முயன்ற அவரது நண்​பருக்கு லேசான காயம் ஏற்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

இதுகுறித்​து, தகவலறிந்​து, சம்பவ இடம் விரைந்த கடம்​பத்​தூர் போலீ​ஸார், ராஜ்கமலின் உடலை கைப்​பற்றி பிரேத பரிசோதனைக்​காக திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்​து, வழக்​குப் பதிவு செய்த போலீ​ஸார், ராஜ்கமல் கொலைக்கு காரணம், முன் விரோத​மா? அல்​லது வேறு காரண​மா? என, தீவிர வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x