Published : 30 Aug 2025 08:03 AM
Last Updated : 30 Aug 2025 08:03 AM

சிவகங்கையில் இரு தரப்பினரிடையே தகராறு: பாஜக மாவட்ட நிர்வாகி கொலை

சதீஷ்குமார்

சிவகங்கை: இரு தரப்​பினரிடையே ஏற்​பட்ட தகராறில் சிவகங்கை பாஜக நிர்​வாகி கொலை செய்​யப்​பட்​டார். சிவகங்கை மஜித் சாலை​யைச் சேர்ந்​தவர் சதீஷ்கு​மார்​(53). பாஜக மாவட்ட வர்த்தக பிரிவுச் செய​லா​ள​ரான இவர், வாரச்​சந்தை சாலை​யில் இருசக்கர வாக​னம் பழுதுநீக்​கும் கடை நடத்தி வந்​தார்.

அங்கு மணிபாரதி என்​பவர் பணிபுரிந்​தார். இரு​வரும் ஓய்​வுக்​காக கடை அருகே வாடகைக்​கு அறை எடுத்துத் தங்​கினர். அவர்களது அறைக்கு அரு​கே​யுள்ள மற்​றொரு அறை​யில், ‘ட்​ரம்​செட்’ அடிக்​கும் தொழிலா​ளர்​கள் சிலர் தங்கி​யிருந்​தனர். இந்​நிலை​யில், நேற்று முன்​ தினம் இரவு இரு தரப்​பினரிடையே ஏற்​பட்ட தக ராறில் தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது.

இதில் கீழே விழுந்த சதீஷ்கு​மார், மணி​பாரதி ஆகியோர் படு​காயமடைந்​து, சிவகங்கை அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்கப்​பட்​டனர் அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்கு​மார் உயி​ரிழந்​தார். மணிபாரதி சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சிவகங்கை நகர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, திருப்​பத்​தூர் அரு​கே​ உள்ள ஏரியூர் வடவன்​பட்​டியைச் சேர்ந்த செந்​தமிழ்​செல்​வன் என்ற ஹரி(19), குறிஞ்சி நகரைச் சேர்ந்த ஆனந்த் (19), மேலூர் அரு​கே​உள்ள பட்​டூரைச் சேர்ந்த அன்​பரசன் (25), கண்​ணன் (20), அவரது சகோ​தரர் பூபதி (19)ஆகியோ ரைக் கைது செய்​தனர். மேலும், 3 பேரை தேடி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x