Published : 29 Aug 2025 12:31 AM
Last Updated : 29 Aug 2025 12:31 AM

ஓய்வுபெற்ற அஞ்சல் நிலைய அதிகாரியிடம் நூதன முறையில் ரூ.13.50 லட்சம் மோசடி

திருவாரூர்: திரு​வாரூர் ஏ.டி.பன்​னீர்​செல்​வம் நகர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் குஞ்​சித​பாதம்​(80). ஓய்​வு​பெற்ற அஞ்​சல் நிலைய அதி​காரி​யான இவரிடம், இரு வாட்​ஸ்​அப் எண்​களில் இருந்து கடந்த 19-ம் தேதி வீடியோ அழைப்பு வந்​துள்​ளது. அதில் பேசிய மர்ம நபர்​கள், “உங்​கள் முகவரிக்கு சட்​ட​விரோத​மான கடத்​தல் பொருள் பார்​சல் வந்​துள்ளது. உங்​கள் மீது நடவடிக்கை எடுத்​துள்​ளோம். நீங்​கள் பணம் அளிக்க​வில்லை எனில், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்​றப்​படும்” என்று மிரட்​டி​யுள்​ளனர்.

இதனால் பதற்​றமடைந்த குஞ்​சித​பாதம், அந்த மர்ம நபர்​கள் குறிப்​பிட்ட 3 வங்​கிக் கணக்​கு​களுக்கு 7 தவணை​களாக ரூ.13.50 லட்​சத்தை அனுப்​பி​யுள்​ளார். பின்​னர், தான் ஏமாற்​றப்​பட்​டதை அறிந்த குஞ்​சித​பாதம், திரு​வாரூர் சைபர் க்ரைம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். இதுகுறித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x