Published : 26 Aug 2025 05:30 AM
Last Updated : 26 Aug 2025 05:30 AM

விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்: நைஜீரிய நாட்டு இளம்பெண் கைது

சென்னை: சென்னை விமான நிலை​யத்​தில் ரூ.20 கோடி மதிப்​புள்ள போதைப் பொருளை பறி​முதல் செய்த சுங்க அதி​காரி​கள் அதனை கடத்தி வந்த நைஜீரிய நாட்டு இளம் பெண்ணை கைது செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். சென்னை சர்​வ​தேச விமான நிலை​யத்​துக்கு வெளி​நாடு​களில் இருந்து வரும் விமானங்​களை சுங்க துறை அதி​காரி​கள் கடந்த 23-ம் தேதி அதி​காலை தீவிர​மாக கண்​காணித்து வந்​தனர்.

அப்​போது, கத்​தார் நாட்டு தலைநகர் தோகா​விலிருந்​து, கத்​தார் ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானம் ஒன்​று, சென்னை சர்​வ​தேச விமான நிலை​யத்​துக்கு வந்​தது. அந்த விமானத்​தில் வந்த பயணி​களை பரிசோதனை செய்​தனர்.

அப்​போது ஆப்​பிரிக்க நாட்​டில் இருந்​து, தோகா வழி​யாக சென்​னைக்கு, சுற்​றுலா பயணி​யாக நைஜீரி​யாவை சேர்ந்த சுமார் 30 வயது இளம்​பெண் ஒரு​வர் வந்​தார். அவரை சுங்க அதி​காரி​கள் சோதனை செய்​தனர். அப்​போது அவரது சூட்​கேஸில் 2 கிலோ போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்​தது கண்​டுபிடிக்​கப்​பட்​டது.

அதன் சர்​வ​தேச மதிப்பு ரூ.20 கோடி என சுங்க அதி​காரி​கள் தெரி​வித்​தனர். இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்து அதிகாரிகள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இதே​போல், மலேசியா தலைநகர் கோலாலம்​பூரில் இருந்து சென்னை விமானத்​தில் வந்த தம்​ப​தி​யிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்​புள்ள 1,018 கிராம் தங்க கட்​டிகளை சுங்க அதி​காரி​கள் பறி​முதல் செய்து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x