Published : 25 Aug 2025 06:21 AM
Last Updated : 25 Aug 2025 06:21 AM

திருமணத்துக்கு மறுத்ததால் வேப்பேரியில் 7-வது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை: காதலன் கைது

சென்னை: நிச்​சய​தார்த்​தம் செய்​து​விட்டு காதலன் திரு​மணம் செய்ய மறுத்​த​தால், விரக்​தி​யில் 7-வது மாடியி​லிருந்து குதித்து இளம்​பெண் தற்​கொலை செய்து கொண்​டார். சென்னை ராயபுரம் புது​மனை குப்​பம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் ஹர்​ஷி​தா(25). மாற்றுத் திற​னாளி​யான இவர் பிபிஏ படித்து முடித்து வீட்​டில் இருந்​து​வந்​தார். சென்னை வேப்​பேரி ஈவிகே சம்​பத் சாலை​யில் உள்ள அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பில் வசித்து வருபவர் தர்​ஷன்​(26).

ஹர்​ஷி​தா​வும், தர்​ஷனும் கடந்த ஒன்​றரை ஆண்​டு​களாகக் காதலித்து வந்​துள்​ளனர். கடந்த பிப்​ர​வரி மாதம் இரு வீட்​டார் சம்​மதத்துடன் அண்​ணாநகரில் உள்ள ஓட்​டலில் இரு​வருக்​கும் விமரிசை​யாகநிச்​சய​தார்த்​தம் நடந்​தது. இந்​நிலை​யில், கடந்த சில நாட்​களுக்கு முன்புதிடீரென ஹர்​ஷி​தா​விடம், ‘உன்னை திரு​மணம் செய்ய விருப்​பம் இல்​லை, திரு​மணத்தை நிறுத்​தி​விடலாம்’ என தர்​ஷன் கூறிய​தாகத்தெரி​கிறது.

இதனால், ஹர்​ஷிதா மன உளைச்​சலில் இருந்​துள்​ளார். இதுகுறித்து பெற்​றோரிடம் கூறிஅழுதுள்​ளார். இதையடுத்து நேற்று முன் தினம் இரவு, வேப்​பேரி​யில் தர்​ஷன் வசிக்​கும் அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​புக்கு ஹர்​ஷி​தா​வின் குடும்​பத்​தினர் வந்​து, தர்​ஷன்குடும்​பத்​தினருடன் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது ஹர்​ஷி​தா, தர்​ஷன் இரு​வரும் மற்​றொரு அறை​யில் தனி​யாக பேசிக் கொண்டிருந்தனர்.

பின்​னர் திடீரென ஹர்​ஷிதா கோபத்​துடன் வேக​மாக மொட்டை மாடிக்​குச் சென்று தர்​ஷனிடம் ‘இப்​போ​தாவது என்​னைத் திரு​மணம் செய்து கொள்​வா​யா?’ எனக் கேட்​ட​தாக தெரி​கிறது. அப்போது தர்​ஷன்,என் மீது எந்​தத் தவறும் இல்லைஎனக் கூறி, திருமணத்​துக்கு மறுப்பு தெரி​விப்​பது போலவே பேசி​யுள்​ளார். இதனால், விரக்​தி​யில் ஹர்​ஷி​தா, 7-வது மாடியி​லிருந்து குதித்து தற்​கொலை செய்து கொண்​டார். வேப்​பேரி போலீ​ஸார் ஹர்​ஷிதாஉடலை மீட்​டு, ராஜீவ்​காந்தி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்து, தர்​ஷனை கைதுசெய்​துவி​சா​ரித்து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x