Published : 25 Aug 2025 06:43 AM
Last Updated : 25 Aug 2025 06:43 AM

விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

சென்னை: விடு​தி​க்​குள்​ அத்​து​மீறி நுழைந்​து பெண்​ணுக்​கு ​பாலியல்​ தொல்​லை ​கொடு​த்​த இளைஞரை ​போலீ​ஸார்​ கை​து செய்தனர்​. சென்​னை வேளச்​சேரி பகு​தி​யில்​ தனி​யார்​ தங்​கும்​ ​விடு​தி உள்​ளது. இந்​த ​விடு​தி​யில்​ 26 வய​தான இளம்​பெண்​ ஒரு​வர்​ தங்கி​யிருந்​து, அப்​பகு​தி​யில்​ உள்​ள தனி​யார்​ நிறுவனத்​தில்​ பணிபுரிந்​து வரு​கிறார்​.

கடந்​த 19-ம்​ தே​தி ​விடு​தி​யின்​ அறை​ கத​வைத்​ ​திறந்​து ​வைத்​து அந்​த இளம்​பெண்​ உறங்​கி​யுள்​ளார்​. அப்​போது அ​தி​காலை நேரத்​தில்​ ​விடு​தி​க்​குள்​ நுழைந்​த மர்​ம நபர்​, தூங்​கி​க்​ ​கொண்​டிருந்​த அந்த​பெண்​ணுக்​கு ​பாலியல்​ தொல்​லை ​கொடு​த்​துள்​ளார்​.

தூக்​கத்​திலிருந்​து ​விழித்​த பெண்​ அ​திர்​ச்​சி​யில்​ சத்​தம்​போட்​டார்​. உடனே அந்​த நபர்​ அங்​கிருந்​து த​ப்​பியோடி​னார். இதுகுறித்​து வேளச்​சேரி ​போலீ​ஸில்​ இளம்​பெண்​ பு​கார்​ அளித்​தா​ர்​.

வழக்​குப்​ப​திவு செய்​து ​வி​சா​ரணை நடத்​தி​ய ​போலீ​ஸார்​, இச்​சம்​பவத்​தில்​ ஈடு​பட்​டது புதுக்​கோட்​டை ​மாவட்​டம்​ நெய்​வாசல்​ பகுதியைச்​ சேர்​ந்​த லட்​சுமணன்​(25) என்​​பது​ம்​, இவர்​ வேளச்​சேரி​யில்​ உள்​ள தனி​யார்​ ஓட்​டலில்​ கிளினீங்​ வேலை செய்​வது​ம்​ தெரிய​வந்தது. இதையடு​த்​து ​போலீ​ஸார்​ அவரை கை​து செய்​து சிறை​யில்​ அடைத்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x