Published : 25 Aug 2025 07:15 AM
Last Updated : 25 Aug 2025 07:15 AM

பாளையங்கோட்டை அருகே மனைவி, மகனை எரித்து கொன்றவர் தற்கொலை முயற்சி

திருநெல்வேலி: திருநெல்​வேலி மாவட்​டம் பாளை​யங்​கோட்டை அரு​கே​யுள்ள ஆரைகுளம் கிராமத்​தில் ஒரு வீட்​டுக்​குள் 2 பேர் உயிருக்​குப் போராடு​வ​தாக​வும், வீட்​டுக்கு வெளியே ஒரு​வர் பலத்த தீக்​கா​யத்​துடன் இருப்​ப​தாக​வும் தீயணைப்​புத் துறை​யினருக்கு தகவல் கிடைத்​தது.

தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்​கள், பலத்த காயங்​களு​டன் இருந்த 3 பேரை​யும் நெல்லை அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர்.

இதுகுறித்து முன்​னீர்​பள்​ளம் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி​ய​தில், அப்​பகு​தி​யைச் சேர்ந்த சகாரியா (65) என்​பவர், தனது மனைவி மெர்சி (58), மகன் ஹார்லி பினோ (27) ஆகியோர் மீது பெட்​ரோல் ஊற்றி தீவைத்து வீட்டை பூட்​டி​விட்​டு, வெளியே வந்து தனது உடலிலும் பெட்​ரோல் ஊற்றி தீவைத்​துக்​கொண்​டது தெரிய​வந்​தது.

மருத்​து​வ​மனைக்கு கொண்​டு​செல்​லும் வழி​யில் மெர்​சி, ஹார்லி பினோ ஆகியோர் உயி​ரிழந்​தனர். சகாரி​யா​வுக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

சகாரி​யா​வுக்கு 2 மகன்​கள், ஒரு மகள் உள்​ளனர். இவர்​களிடையே குடும்​பத் தகராறு இருந்​துள்​ளது. மூத்த மகனுக்கு சில நாட்களுக்கு முன்பு திரு​மணம் நடந்த நிலை​யில், திரு​மணத்​துக்கு சகாரி​யாவை அழைக்​க​வில்லை என்று கூறப்​படு​கிறது. மூத்த மகன் தனது மனை​வி​யுடன் நேற்று கன்​னி​யாகுமரி சென்​றிருந்​தார். அப்​போது வீட்​டில் தகராறு ஏற்​பட்​டு, சகாரியா தனது மனை​வி, 2-வது மகன் மீது பெட்​ரோல் ஊற்றி தீ வைத்​து​விட்​டு, தனது உடலிலும் பெட்​ரோல் ஊற்றி தீ வைத்​துக் கொண்​ட​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x