Published : 24 Aug 2025 12:38 PM
Last Updated : 24 Aug 2025 12:38 PM
லக்னோ: உ.பி. மாநில கூடுதல் போலீஸ் டிஜிபி (சட்டம்-ஒழுங்கு மற்றும் எஸ்டிஎஃப்) அமிதாப் யாஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரோஹிங்கியா முஸ்லிம்கள், வங்கதேசம், நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் குடியேற வசதியாக ஒரு கும்பல் போலி ஆதார் அட்டை தயாரிப்பதாக எங்களுக்கு ரகசியத் தகவல் வந்தது.
இதையடுத்து உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் சோதனை நடத்தினோம். இதில் ஓர் இடத்தில் 8 பேரும், சஹ்ரான்பூரில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். 9 மாநிலங்களில் இதுபோன்று இவர்கள் போலியான ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை தயார் செய்து அதை நேபாளம், வங்கதேசம், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT