Published : 23 Aug 2025 06:25 AM
Last Updated : 23 Aug 2025 06:25 AM

உரிமையாளருக்கு தெரியாமல் வீடு, கடைகளை வாடகைக்கு விட்டு ரூ.27 லட்சம் மோசடி செய்தவர் கைது

சென்னை: வீட்டு உரிமை​யாளர் சவுதி அரேபியா சென்ற நிலை​யில், அந்த வீட்​டில் வாடகைக்கு இருந்​தவர், உரிமை​யாள​ருக்கே தெரி​யாமல் மீத​முள்ள வீடு மற்​றும் கடைகளை வாடகைக்கு விட்டு ரூ.27 லட்​சம் மோசடி செய்​துள்​ளார். சென்னை பெருங்​குடியைச் சேர்ந்​தவர் சாரா வஹாப்​(34).

இவருக்கு ராயப்​பேட்​டை, கவுடியா மடம் சாலை​யில் சொந்​த​மாக வீடு உள்​ளது. தரை தளத்​தில் 3 கடைகளும், 1-வது மற்​றும் 2-வது தளத்​தில் 4 வீடு​கள், கடைகள் உள்​ளன. கடந்த 2018-ம் ஆண்டு சாரா வஹாப் தனது பெற்​றோருடன் சவுதி அரேபி​யா​ சென்று விட்டார்.

தரை தளத்​தில் புல்லா ராவ் என்​பவர் மட்​டும் போட்டோ ஸ்டுடியோ கடை நடத்தி வந்​தார். மற்ற கடைகள் மற்​றும் வீடு​கள் பூட்டி வைக்​கப்​பட்​டிருந்​தன. இந்​நிலை​யில், சாரா வஹாப், சென்னை திரும்​பிய​போது புல்லா ராவ் இறந்​திருந்​தார்.

அவரது மகன் அசோக் (34) என்​பவர், தந்தை ஏற்​கெனவே நடத்​திய ஸ்டூடியோ கடையை நடத்தி வந்​தார். மேலும், பூட்​டி​யிருந்த கடைகள் மற்​றும் வீடு​களின் பூட்டை உடைத்​து, தன்னை இவ்​வீட்​டின் உரிமை​யாளர் எனக்​கூறி போலி ஆவணங்​கள் தயாரித்​து, அதன்​மூலம் வீடு​களை வாடகைக்கு விட்டு ரூ.27 லட்​சம் வரை மோசடி செய்​திருந்​தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சாரா வஹாப், இது தொடர்​பாக அவரிடம் கேட்​ட​போது கொலை மிரட்​டல் விடுத்​துள்​ளார். இதுதொடர்பாக சாரா வஹாப் போலீஸில் புகார் அளித்தார். இதில், சாரா வஹாப்​புக்​குச் சொந்​த​மான வீடு​களை முறை​கே​டாக வாடகைக்கு விட்டு அதன்​மூலம் ரூ.27 லட்​சம் வரை அசோக் மோசடி செய்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, அவரைக் கைது செய்த போலீ​ஸார், நேற்று முன்​தினம் சிறை​யில் அடைத்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x