Published : 23 Aug 2025 06:00 AM
Last Updated : 23 Aug 2025 06:00 AM

புதுக்கோட்டை | மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

புதுக்கோட்டை: பாலியல் தொல்லை கொடுத்​த​தாக அரசு உதவி​பெறும் பள்ளி ஆசிரியர் கைது செய்​யப்​பட்​டார். திருச்சி மேல​கல்​கண்​டார் கோட்டை மாருதி நகரைச் சேர்ந்​தவர் எஸ்​.​வில்​லி​யம் பால்​ராஜ்(52). இவர், புதுக்​கோட்டை மாவட்​டம் விராலிமலை அருகே குன்​னத்​தூரில் உள்ள அரசு உதவி​பெறும் பள்​ளி​யில் முது​நிலை கணித ஆசிரிய​ராகப் பணிபுரிந்து வந்​தார்.

இந்​நிலை​யில், அங்கு பயிலும் ஒரு மாணவிக்கு கடந்த ஓராண்​டாக பாலியல் தொல்லை கொடுத்துள்​ளார். இதுகுறித்து மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு அலு​வல​கத்​துக்கு புகார் தெரிவிக்​கப்​பட்​டது. மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு அலு​வலர் வசந்​தகு​மார் முதல்​கட்ட விசா​ரணைக்​குப் பிறகு, கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

இது தொடர்​பாக ஆசிரியர் வில்​லி​யம் பால்​ராஜ் மீது போக்சோ உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, அவரை கைது செய்​தனர். பின்​னர், புதுக்​கோட்டை மகளிர் நீதி​மன்​றத்தில் ஆஜர்​படுத்​தி, சிறை​யில்​ அடைத்தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x