Published : 22 Aug 2025 07:13 AM
Last Updated : 22 Aug 2025 07:13 AM

லாரி மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

நாமக்கல்: சேலம் மாவட்​டம் வீர​பாண்டி அரு​கே​யுள்ள வேம்​படி​தாளம் மாரி​யம்​மன் கோயில் தெரு​வைச் சேர்ந்​தவர் சுகு​மார் (47). பட்டு நெசவுத் தொழிலில் ஈடு​பட்டு வந்​தார். இவர் நேற்று காலை மனைவி சுசிலா (45), தாய் கமலம்(65) மற்​றும் உறவினர்​கள் மோகன் (45), அவரது மனைவி புவனேஸ்​வரி (40) ஆகியோ​ருடன் பவானி கூடு​துறை​யில் உள்ள கோயிலுக்கு காரில் சென்​றார்.

பின்​னர், அனை​வரும் வேம்​படி​தாளம் புறப்​பட்​டுள்​ளனர். காரை சுகு​மார் ஓட்​டி​னார். நாமக்​கல் மாவட்​டம் குமார​பாளை​யம் அருகே பச்​சாம்​பாளை​யம் பகு​தி​யில் வந்​த​போது, திடீரென ஓட்​டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்த கார், சாலை​யோரம் நின்​றிருந்த லாரி​யின் பின்​புறம் அதிவேக​மாக மோதி​யது.

இந்த விபத்​தில் சுகு​மார், அவரது தாய் கமலம், மோகன் ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். பலத்த காயமடைந்த சுசிலா, புவனேஸ்​வரி ஆகியோர் சேலம் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x