Published : 21 Aug 2025 05:52 AM
Last Updated : 21 Aug 2025 05:52 AM

வடமாநிலங்களில் இருந்து வாங்கி வந்து சென்​னை​யில் கஞ்சா விற்ற கல்​லூரி மாணவர் கூட்​டாளி​யுடன் கைது

இப்​ராஹிம், தவுபிக்

சென்னை: சென்​னை​யில் உயர் ரக கஞ்சா விற்​பனை​யில் ஈடு​பட்ட கல்​லூரி மாணவர் கூட்​டாளி​யுடன் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். சென்​னை​யில் போதைப் பொருள் கடத்​தல், பதுக்​கல் மற்​றும் விற்​பனையைத் தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்​வாளர்​கள் தலை​மை​யிலும் தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்த தனிப்​படை போலீ​ஸார் போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரிவு போலீ​ஸாருடன் ஒருங்​கிணைந்து கண்​காணிப்பை தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர். அதன் தொடர்ச்​சி​யாக ஐஸ் அவுஸ் காவல் நிலைய போலீ​ஸார் நேற்று முன்​தினம் திரு​வல்​லிக்​கேணி, பாரதி சாலை பகு​தி​யில் கண்​காணித்​தனர்.

அப்​போது அங்கு 2 பேர் சந்​தேகத்​துக்​கிட​மான முறை​யில் நின்​றிருந்​தனர். போலீ​ஸார் அவர்​களிடம் விசா​ரித்​த​போது முன்​னுக்​குப்​பின் முரணாக பதில் அளித்​தனர். அவர்​களிடம் நடத்​திய சோதனை​யில் உயர்ரக ஓ.ஜி. வகை கஞ்சா வைத்​திருந்​தது தெரிந்​தது.

எனவே அதை வைத்​திருந்த திரு​வல்​லிக்​கேணி​யைச் சேர்ந்த முகமது இப்​ராஹிம் (32), முகமது தவுபிக் (19) ஆகிய இரு​வரை​யும் கைது செய்​தனர். கூட்டாளிகளுக்கு வலை தொடர் விசா​ரணை​யில் முகமது இப்​ராஹிம் செல்​போன்​களை விற்​பனை செய்து வரு​வதும், முகமது தவுபிக் தனி​யார் கல்​லூரி ஒன்​றில் 2-ம் ஆண்டு படித்து வரு​வதும் தெரிந்​தது.

இவர்​கள் கூட்​டாக சேர்ந்து வட மாநிலங்​களி​லிருந்து கஞ்​சாவை வாங்​கிவந்து சென்​னை​யில் இளைஞர்​கள், மாணவர்​களுக்கு அதிக விலைக்கு விற்​றதும் தெரிய வந்​தது. தொடர்ந்​து, தலைமறை​வாக உள்ள இவர்​களது கூட்​டாளி​களை​யும்​ போலீ​ஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x