Published : 21 Aug 2025 06:51 AM
Last Updated : 21 Aug 2025 06:51 AM

விருத்தாசலம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

வேல்முருகன், ஐயப்பன், ஆதினேஷ்

கடலூர்: ​விருத்​தாசலம் அருகே மரத்​தில் கார் மோதி​ய​தில் 3 இளைஞர்​கள் பரிதாபமாக உயி​ரிழந்​தனர். பலத்த காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்​டம் விருத்​தாசலம் அரு​கே​யுள்ள எரு​மனூர் முத்​து​மாரி​யம்​மன் கோயி​லில் நேற்று முன்​தினம் இரவு தெருக்​கூத்து நடை​பெற்​றது.

இதைக் காண வந்த அதே பகு​தி​யைச் சேர்ந்த வெங்​கடேசன் என்​பவர், நள்​ளிரவு அதே பகு​தியை சேர்ந்த ஆதினேஷ் (21), ஐயப்​பன் (19), வேல்​முரு​கன் (21), வெங்​கடேசன் (25), அவரது தம்பி கவுதமன் (20), நடராஜன் (21) ஆகியோரை காரில் ஏற்​றிக் கொண்​டு, டீ குடிப்​ப​தற்​காக சித்​தலூர் நோக்கிச் சென்​றனர்.

கட்டுப்பாட்டை இழந்த கார் வழி​யில் திடீரென ஓட்​டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்த கார், சாலை​யோர​முள்ள மரத்​தில் மோதி விபத்​துக்​குள்​ளனது. இதில் ஆதினேஷ், ஐயப்​பன், வேல்​முரு​கன் ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். பலத்த காயமடைந்த வெங்​கடேசன், கவுதமன், நடராஜன் ஆகியோர், விருத்​தாலம் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். தகவலறிந்து சென்ற போலீ​ஸார், 3 பேரின் உடல்​களை​யும் மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக விருத்​தாசலம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x