Published : 20 Aug 2025 06:00 AM
Last Updated : 20 Aug 2025 06:00 AM

ரகசிய தகவல்கள் அடிப்படையில் குட்கா கடத்தல்காரர்களை பிடிப்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: போதைப் பொருள் கடத்​தல் கும்​பலை போலீ​ஸார் கைது செய்து வரு​வது​போல், குட்கா வியா​யாரி​களும் கைது செய்யப்பட்டு வரு​கின்​றனர். இதன் தொடர்ச்​சி​யாக சென்னை மேற்கு மண்டல இணை ஆணை​யர் அலு​வல​கத்​தில், இணை ஆணை​யர் திஷா மிட்​டல் தலை​மை​யில் அண்​ணாநகர், கொளத்​தூர் மற்​றும் கோயம்​பேடு காவல் துணை ஆணை​யர்​கள், மாவட்ட உணவுப் பாது​காப்பு அதி​காரி​கள், சுகா​தார ஆய்​வாளர்​களு​டன் கலந்​தாய்​வுக் கூட்​டம் நடத்​தப்​பட்​டது.

இக்​கூட்​டத்​தில் ரகசி​யத் தகவல்​களின் அடிப்​படை​யில் குட்கா வியா​பாரி​களை கைது செய்​வது குறித்​தும், குட்கா வியா​பாரத்தை முற்​றி​லும் தடுக்க கூட்டு ஆய்​வு​கள் மற்​றும் சோதனை​கள் செய்​யும் வழி​முறை​கள் குறித்​தும் ஆலோ​சனை​கள் வழங்​கப்​பட்​டன. இதில், பெருநகர சென்னை மாநக​ராட்​சியி​லிருந்து 20 உணவு பாது​காப்பு , சுகா​தார ஆய்​வாளர்​கள் பங்​கேற்​றனர்.

மேலும் புனித தோமையர் மலை காவல் துணை ஆணை​யர் சீனி​வாசன் தலை​மை​யில், புனித தோமையர் மலை ஆயுதப்​படை கலந்தாய்​வுக் கூட்​டத்​தில், வியா​பாரி​கள் சங்​கத்​தைச் சேர்ந்த மளி​கைக் கடை உரிமை​யாளர்​களிடம் குட்​கா,மாவா போன்ற புகையிலைப் பொருட்​களால் ஏற்​படும் தீமை​கள்குறித்​தும், இவற்றை விற்​பனைசெய்​பவர்​கள் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுப்​பது குறித்​தும் விளக்​கப்​பட்​டது.

குட்​கா,மாவா விற்​பனை குறித்த தகவல் ஏதேனும் கிடைக்​கப்​பெற்​றால் உடனடி​யாக காவல் துறை​யினருக்கு தெரிவிக்​கு​மாறும் கேட்​டுக் கொள்​ளப்​பட்​டது. இந்த நிகழ்ச்​சி​யில் வியா​பாரி​கள் சங்​கத்​தைச் சேர்ந்த மளி​கைக் கடை உரிமை​யாளர்​கள் 50 பேர் மற்றும் போலீஸ் அதி​காரி​கள்​, போலீ​ஸார்​ பங்​கேற்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x