Published : 19 Aug 2025 06:23 AM
Last Updated : 19 Aug 2025 06:23 AM

கு​வைத்​தில் இருந்து சென்னை வந்த விமானத்​தில் புகைபிடித்த பயணி கைது

சென்னை: குவைத்​தில் இருந்து 150 பயணி​கள், 6 ஊழியர்​களு​டன் நேற்று சென்​னைக்கு வந்துகொண்டிருந்த இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானம் நடு​வானில் பறந்து கொண்​டிருந்த போது, அதிலிருந்த தஞ்​சாவூரை சேர்ந்த சேக் முகமது (28) என்ற பயணி, அடிக்கடி விமானத்​தின் கழி​ப்பறைக்கு சென்று புகைபிடித்து வந்​தார். இதனை பார்த்த பயணி​கள் அவர் புகைபிடிப்பதற்கு எதிர்ப்பு தெரி​வித்​தனர்.

ஆனால், பயணி​களு​டன் அவர் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டார். இது தொடர்​பாக, விமான பணிப் பெண்​கள் விமானி​யிடம் தெரி​வித்​தனர். இதையடுத்​து, விமானி, சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தார்.

விமானம் சென்​னை​யில் தரை​யிறங்​கியதும், பாது​காப்பு சோதனை​களை முடித்​து​விட்டு வெளியே வந்த சேக் முகமதுவை இண்​டிகோ ஏர்​லைன்ஸ் பாது​காப்பு அதி​காரி​கள் பிடித்​து, சென்னை விமான நிலைய காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​தனர். போலீ​ஸார் வழக்குப் பதிவுசெய்து அவரைக் கைது செய்து வி​சா​ரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x