Published : 19 Aug 2025 06:56 AM
Last Updated : 19 Aug 2025 06:56 AM

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை: பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்​டம், மேலூர் அருகே காதல் விவ​காரத்​தில் இளைஞர் அடித்​துக் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில், பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் கைது செய்​யப்​பட்டனர். மேலூர் அரு​கிலுள்ள பொட்​டப்​பட்​டியைச் சேர்ந்த சதீஷ்கு​மார்​(21) என்​பவர், தும்​பைப்​பட்​டியைச் சேர்ந்த ராக​வி(24) என்பவரைக் காதலித்​தார். ராகவிக்கு ஏற்​கெனவே திரு​மண​மாகி 2 குழந்​தைகள் உள்ள நிலை​யில், சில ஆண்​டு​களுக்கு முன்பு அவரது கணவர் இறந்து விட்டார்.

இந்​நிலை​யில், இரு​வரின் காதலுக்​கும் எதிர்ப்பு கிளம்பியது. சித்தி வீட்​டில் தன்னை கொடுமைப்படுத்​து​வ​தாக ராகவி செல்போன் மூலம் சதீஷ்கு​மாருக்கு தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து மேலூர் காவல் நிலை​யத்​தில் சதீஷ்கு​மார் புகார் அளித்​தார். அதன்​பேரில், காவல் நிலை​யத்​தில் இரு வீட்​டாரிட​மும் ஆகஸ்ட் 16-ம் தேதி போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். அப்​போது, பெற்​றோருடன் செல்ல ராகவி மறுத்​து, சதீஷ்குமாருடன் இருசக்கர வாக​னத்​தில் சென்​று​விட்​டார்.

இரவில் திருச்சி நோக்கி இவர்​கள் சென்​ற​போது, நான்​கு​வழிச் சாலை​யில் அய்​யாப்​பட்டி அருகே பின்​புற​மாக வந்து கார் மோதி​யது. இதில் இரு​வரும் கீழே விழுந்​தனர். உடனே, காரில் இருந்து இறங்​கிய 5 பேர் கொண்ட கும்​பல் சதீஷ்கு​மாரை அடித்​துக் கொன்​றது. ராக​வி​யும் தாக்​கப்​பட்டு காயமடைந்​த​தால், மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார்.

இச்​சம்​பவம் குறித்து கொட்​டாம்​பட்டி காவல் ஆய்​வாளர் ஜெயந்​தி, கொலை வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்​தார். இதில், குழந்தைகள் இருக்​கும்​போது, சதீஷ்கு​மாருடன் ராகவி சென்​றதால் ஆத்​திரமடைந்த அவரது பெற்றோர் மற்​றும் வெளி​நாட்​டிலுள்ள அவரது சகோ​தரர் ராகுல் தூண்​டு​தலின்​பேரில், இக்​கொலை நடந்​திருப்​பது தெரிய​வந்​தது. இதுதொடர்​பாக, ராக​வி​யின் தந்தை அழகர் (55) மற்​றும் அய்​ய​னார் (22), அருண்​பாண்​டியன் (24) ஆகிய 3 பேரும் நேற்று கைது செய்​யப்​பட்​டனர். மேலும், ராகுல் உட்​பட்ட 5 பேரை போலீ​ஸார் தேடி வருகின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x