Published : 17 Aug 2025 12:36 AM
Last Updated : 17 Aug 2025 12:36 AM

புதுச்சேரியில் கடலில் குளித்த 3 பேர் உயிரிழப்பு

கோப்புப் படம்

புதுச்சேரி: பெங்​களூரு​வில்​ தனி​யார்​ நிறு​வனத்​தில்​ பணிபுரி​யும்​ ஆந்​திர மாநிலம்​ விஜய​வா​டாவைச்​ சேர்ந்​த பவன்​கு​மார்​ (25), கர்​நாடக மாநிலம்​ ஷிமோ​கா பகு​தி​யைச்​ சேர்ந்​த மேகா (29), கர்​நாட​கா ஹூப்​ளி பகு​தி​யைச்​ சேர்ந்​த பிரெட்​ஜ்​வால்​ மேத்​தி (23), குஜ​ராத்​தைச்​ சேர்ந்​த அதிதீ (23), கர்​நாடகத்​தைச்​ சேர்ந்​த ஜீவன்​ (23) உள்​ளிட்​ட நண்​பர்​கள்​ 12 பேர்​ நேற்​று முன்​தினம்​ புதுச்​சேரிக்​கு சுற்​றுலா வந்​தனர்​.

இவர்​கள்​ அரி​யாங்​குப்​பம்​ அரு​கே சின்​ன வீராம்​பட்​டினம்​ ஈடன்​ கடற்​கரைக்​கு நேற்​று வந்​த இவர்​கள்​, கடலில்​ இறங்​கி குளித்​துள்​ளனர்​. அப்​போது, கடலில்​ எழுந்​த ராட்​சத அலை​யில்​ பவன்​கு​மார், மேகா, பிரெட்​ஜ்​வால்​ மேத்​தி,அதிதீ, ஜீவன்​ ஆகியோர்​ சிக்​கி, கடலுக்​குள்​ இழுத்​துச்​ செல்​லப்​பட்​டனர்​. இதைக்​ கண்​ட மற்​றவர்​கள்​ கூச்​சலிட்​டுள்​ளனர்​.

உடனே அங்​கிருந்​த பாது​காப்​பு ஊழியர்​கள்​ அதிதீ, ஜீவன்​ ஆகியோரை மீட்​டு கரைக்​கு கொண்​டு வந்​தனர்​. மற்​ற 3 பேரின்​ உடல்​களும்​ பின்​னர்​ மீட்​கப்​பட்​ டன. அவர்​களது உடல்​கள்​ பிரேதப்​ பரிசோ​தினைக்​காக கதிர்​காமம்​ அரசு மருத்​து​வக்​ கல்​லூரி மருத்​து​வ​மனைக்​கு அனுப்​பிவைக்​கப்​பட்​டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x