Published : 16 Aug 2025 06:43 AM
Last Updated : 16 Aug 2025 06:43 AM

விராலிமலை முருகன் கோயில் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர் தவறி விழுந்து உயிரிழப்பு

ஆறுமுகம்

புதுக்கோட்டை: ஆக்​கிரமிப்​பில் உள்ள கோயில் நிலங்​களை மீட்​கக் கோரி விராலிமலை முரு​கன் கோயி​லில் கோபுரத்​தில் ஏறி போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர் தவறி விழுந்து உயிரிழந்​தார். புதுக்​கோட்டை மாவட்​டம் விராலிமலை அரு​கே​யுள்ள கொடும்​பாளூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் ஆறு​முகம்​(43).

சமூக ஆர்​வல​ரான இவர், விராலிமலை​யில் மலை மீதுள்ள முரு​கன் கோயி​லில் 70 அடி உயர​முள்ள கோபுரத்​தில் ஏறி, கோயிலுக்​குச் சொந்​த​மான நிலங்​களை ஆக்​கிரமிப்​பில் இருந்து மீட்க வேண்​டும், மயில்​கள் சரணால​யம் அமைக்க வேண்​டும் என்று வலி​யுறுத்​தி, தேசி​யக் கொடி​யுடன் நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டார்.

தகவலறிந்து வந்த வரு​வாய் மற்​றும் காவல் துறை​யினர், அவரது கோரிக்​கைகளை நிறைவேற்​றித் தரு​வதாக உறு​தி​ அளித்து சமா​தானப்​படுத்​தினர். பின்​னர் அவரை மீட்​ப​தற்​காக தீயணைப்பு படை​யினர் ஆயத்​த​மாகினர்.

சுதை சிற்​பத்​தைப் பிடித்து... அப்​போது, அவரே கீழே இறங்கி வரு​வ​தாக கூறி​விட்டு கோபுரத்​தின் உச்​சி​யில் இருந்து இறங்​கிக் கொண்​டிருந்​தார். சுதை சிற்​பத்​தைப் பிடித்து இறங்​கிய​போது, சிற்​பம் பெயர்ந்​த​தால் நிலை​தடு​மாறிய ஆறு​முகம் கோபுரத்​தில் இருந்து தவறி கீழே விழுந்​தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்​கிருந்​தவர்​கள் மீட்​டு, அரு​கில் உள்ள அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர்.

அவரைப் பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், ஆறு​முகம் ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாகத் தெரி​வித்​தனர். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்​காக மணப்​பாறை அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டது. இதே​போல, சில மாதங்​களுக்​கு முன்பு விராலிமலை​யில் உள்ள செல்​போன் கோபுரத்​தில் ஏறி, பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி ஆறு​முகம் போ​ராட்​டத்​தில் ஈடு​பட்டது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x