Published : 15 Aug 2025 05:35 AM
Last Updated : 15 Aug 2025 05:35 AM

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு, பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்​கொடுமை வழக்​கில் தொழிலா​ளிக்கு 20 ஆண்​டு​கள் மற்​றும் பெண்​ணுக்கு 5 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து தூத்​துக்​குடி போக்சோ நீதி​மன்​றம் தீர்ப்​பு அளித்தது.

தூத்​துக்​குடி தென்​பாகம் காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட பகு​தி​யில் 2024-ம் ஆண்டு 17 வயது சிறுமியை கோவில்​பட்டி மேட்​டுத்​தெரு​வைச் சேர்ந்த கனக​ராஜ் மனைவி கவிதா (25) என்​பவர் பாலியல் ரீதி​யாக தொந்​தரவு செய்​துள்​ளார். மேலும், அந்த சிறுமியை தூத்​துக்​குடி பூபாண்​டியபுரத்​தைச் சேர்ந்த பெயின்​டர் தங்​கதுரை (41) என்​பவர் பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூத்​துக்​குடி தென்​பாகம் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்கு பதிவு செய்​து, இரு​வரை​யும் கைது செய்​தனர். இந்த வழக்கு விசா​ரணை தூத்​துக்​குடி போக்சோ நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது.

வழக்கை விசா​ரித்த நீதிபதி எம்​.பீரித்​தா, குற்​றம் சாட்​டப்​பட்ட தங்​கதுரைக்கு 20 ஆண்​டு​கள் சிறை தண்​டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், கவி​தாவுக்கு 5 ஆண்​டு​கள் சிறை தண்​டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்​பளித்​தார். இவ்​வழக்​கில் காவல் துறை தரப்​பில் அரசு வழக்​கறிஞர் முத்​துலட்​சுமி ஆஜரா​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x