Published : 14 Aug 2025 06:41 AM
Last Updated : 14 Aug 2025 06:41 AM

ஆணாக மாறுவேடமிட்டு சகோதரியின் மாமனார் வீட்டில் ரூ.1.5 கோடியை திருடிய பெண் கைது

பால்கர்: சகோதரியின் வயதான மாமனார் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு ஆண் வேடத்தில் சென்று ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்க நகை, பணத்தை கொள்ளையடித்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து மகாராஷ்டிர காவல் துறை உதவி ஆணையர் (குற்றப்பிரிவு) மதன் பல்லால் கூறியதாவது: மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் தனது சகோதரியின் வயதான மாமனார் (66) வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு திருட திட்டமிட்டுள்ளார்.

அதன்படி வசை நகர எல்லைக்கு உட்பட்ட மாணிக்பூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்​டுக்கு திங்​கள்​கிழமை பிற்​பகல் அந்​தப் பெண் ஆண்​போல் மாறு​வேட​மிட்டு சென்​றுள்​ளார். வீட்​டுக்​குள் நுழைந்​ததும் வயதான மாம​னாரை கழி​வறை​யில் தள்ளி தாழிட்​டு​விட்டு 1.4 கிலோ தங்​கம், 2.3 கிலோ வெள்​ளி, ரொக்​கம் என ரூ.1.50,84,050 கோடி மதிப்​பிலான பொருட்​களை கொள்​ளை​யடித்​து​விட்​டுச் சென்​றுள்​ளார்.

சிசிடிவி காட்சிகள்: பாதிக்​கப்​பட்​ட​வர் அளித்த புகாரைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​யப்​பட்டு பார​திய நியாய சன்​ஹிதா சட்​டப் பிரிவு​களின் கீழ் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. 75 முதல் 80 சிசிடிவி​களை ஆராய்ந்​த​தில் திருடிய பொருட்​களை ஆண் உரு​வத்​தில் சென்று ஒரு இடத்​தில் பதுக்கி வைத்​து​விட்டு பின்​னர் சிறிது நேரம் கழித்து பெண் உரு​வில் வந்து அதனை எடுத்​துச் செல்​வது தெரிய​வந்​தது.

திருடிய பெண் குஜ​ராத்​தில் உள்ள உறவினர் வீட்​டில் பதுங்​கி​யிருப்​ப​தாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அன்று இரவே நவசா​ரி​யில் வைத்து அந்த பெண் குற்​ற​வாளி கைது செய்​யப்​பட்​டார். விசா​ரணை​யில் அவர் பெயர் ஜோதி மோகன் பானு​சாலி என்​பதும், அவர் தனது சொந்த சகோதரி​யின் மாம​னார் வீட்​டுக்கு ஆண் போன்று மாறு​வேடத்​தில் சென்று திருடியதை​யும் ஒப்​புக்​கொண்​டார். திருடு​போன பொருட்​கள் அனைத்​தும் அவரிட​மிருந்து மீட்​கப்​பட்​டன. இந்த திருட்டு சம்​பவம் தொடர்​பாக மேலும் வி​சா​ரணை நடை​பெற்​று வரு​கிறது. இவ்​வாறு மதன்​ தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x