Published : 13 Aug 2025 06:06 AM
Last Updated : 13 Aug 2025 06:06 AM

கோவை விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சா பறிமுதல்!

கோவை: கோவை விமான நிலை​யத்​தில் சிங்​கப்​பூரிலிருந்து நேற்று முன்​தினம் இரவு வந்த விமான பயணி​களிடம் இருந்து ரூ.7 கோடி மதிப்​பிலான ‘ஹைட்​ரோ​போனிக்’ கஞ்​சாவைப் பறி​முதல் செய்த சுங்​கவரித் துறை​யினர், இது தொடர்​பாக 2 பேரைக் கைது செய்​தனர். சிங்​கப்​பூரிலிருந்து கோவை வரும் விமானத்​தில் கஞ்சா கடத்​தப்​படு​வ​தாக கிடைத்த தகவலின் பேரில், சுங்​கவரி த்துறை அதி​காரி​கள் கண்​காணிப்பு மேற்​கொண்​டனர்.

2 பேர் கைது... இதையொட்​டி, நேற்று முன்​தினம் இரவு வந்த விமானத்​தில் பயணி​கள் இரு​வரிடம் சந்​தேகத்​தின் பேரில் விசா​ரணை மேற்​கொண்​டனர். அவர்​களது உடமை​களை சோதனை செய்​த​போது, 6.713 கிலோ ‘ஹைட்​ரோ​போனிக்’ கஞ்சா இருப்​பது தெரிய வந்தது. அவற்​றைப் பறி​முதல் செய்த அதி​காரி​கள், இது தொடர்​பாக கேரள மாநிலம் கோட்​ட​யம் பகு​தியை சேர்ந்த பகத் முன் முஜீப், சுஹெய்ல் உபயதுல்லா ஆகியோரைக் கைது செய்​தனர்.

‘ஹைட்​ரோ​போனிக் கஞ்​சா’ என்​பது வெளி​நாடு​களில் குறிப்​பிட்ட வெப்​பநிலை​யில், வீட்​டுக்​குள்​ளேயே வளர்க்​கப்​படும் கஞ்சா செடியாகும். சமீப​கால​மாக வெளி​நாடு​களில் இருந்து இத்​தகைய கஞ்சா கடத்தி வரப்​படும் சம்​பவங்​கள் அதி​கம் நடக்​கின்​றன. இவற்​றைத் தடுக்க சுங்​கவரித் துறை மற்​றும் மத்​திய வரு​வாய் புல​னாய்​வுத் துறை அதி​காரி​கள் தொடர் நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

இதே​போல, சிங்​கப்​பூரில் இருந்து வந்த அதே விமானத்​தில் பயணித்த புதுக்​கோட்டை மாவட்​டத்தை சேர்ந்த தமிழரசி ஜெய​மாணிக்கம் மற்​றும் பாண்​டிதுரை சுப்​பையா ஆகியோரிடம் இருந்து ரு. 18.67 லட்​சம் மதிப்​பிலான கடத்​தல் ட்ரோன்​களை சுங்​கவரித் துறை அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x